அவளின் அடிமை
அவளின் அடிமை
நாம் சில பாடல்களுக்கு அடிமை ஆவதுண்டு. மொழிகள் எல்லாம் தடையில்லை நமக்கு. திரும்ப திரும்ப ஆயிரம் முறை கேட்டாலும் சலிப்பதில்லை.
குரலா, அழகிய வரிகளா அல்ல ராகமா என்பதை எல்லாம் ஆராய்ச்சி செய்யமாட்டோம்.
எதோ ஒன்று அவளை நினைக்க வைக்கிறது, பழைய நினைவுகளை மீட்டு தருகிறது. இதழின் ஓரம் சிறு புன்னகை வந்து போகிறது, இருக்கும் இடம் மறந்து.
இதை விட சிறந்த காரணங்கள் வேண்டுமா ஏன் அந்த பாட்டிற்கு அடிமை ஆனேன் என்பதற்கு.
