Dr.Padmini Kumar

Classics

5  

Dr.Padmini Kumar

Classics

தாய் மண்ணே வணக்கம் ( பாகம் 4)

தாய் மண்ணே வணக்கம் ( பாகம் 4)

2 mins
449


அடுத்த கடிதம் _

 சுதந்திர தின விழா ப்ரோகிராம் பற்றி... "சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடினோம். எங்கள் ப்ரோக்ராம் மிகப்பெரிய ஹிட் ; என் பாட்டுக்குத்தான் கைதட்டல்கள் அதிகமாக இருந்தன. உன்னைவிட நன்றாக சுருதி சேர்த்து பாடினேனாக்கும் ! ஹா..ஹா..ஹா..ஜோக்ஸ்!எனது டுடோரியல் நன்றாக நடக்கிறது.புரொபஸர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். என்னால் மட்டும் இல்லை.. பாரதத்தின் பல மாணவர்களால். பாரதத்தின் மாணவர்கள் இங்கே மிகச்சிறந்த பேர் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்கப் ப்ரொபஸர்கள் பார்வையில் பாரதத்தின் மாணவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். ஏனென்றால்.. அவர்கள் ரூபாயின்... டாலரின்.. மதிப்பு தெரிந்தவர்கள் இல்லையா.. ஒருவனுக்கு தேவை தன் தங்கை அல்லது அக்காவின் வரதட்சணை பணம்; ஒருவனுக்கு தாய் தந்தையின் பூர்வீக வீட்டை காப்பாற்ற வேண்டிய நிலை... என்னோடு படிக்கும் மாணவர்கள் அனைவருமே நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான். தன் சம்பாத்தியத்தில்தான் அவர்கள் காலத்தை ஓட்ட வேண்டும். அவர்கள் அம்மா அப்பா சோப்பு வாங்க கடைக்குச் சென்றாலே, இருப்பதிலேயே விலை குறைந்த சோப்பை வாங்கி வந்து, உடைகளில் எவ்வளவுக்கெவ்வளவு சுத்தம் வரவழைக்க முடியுமோ அவ்வளவு பிரகாசத்தைக் கொண்டு வர, கடினமாக உழைத்து, பைசா, பைசாவாக சேமித்து, தம் பிள்ளை உயர்ந்த தொழில்நுட்பக் கல்வி பயில வேண்டும் என்பதற்காக அமெரிக்கா அனுப்புவதில் வெற்றி கண்டவர்கள். அவர்களின் கடின உழைப்பின் முழு வெற்றிக்கான பொறுப்பு இப்போது அவர்கள் பிள்ளைகளுடையது தானே! தன் பிள்ளைகள் ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து டாலர் டாலராக சம்பாதித்து தங்கள் கஷ்டங்களை எல்லாம் விலக்க வருவான் என்று எத்தனை ஆவலுடனும் கனவுகளுடனும் பெற்றோர்கள் காத்திருப்பார்கள் ! குழந்தை பருவத்திலிருந்து இப்படி பெற்றோர்களின் கஷ்ட நஷ்டங்களைக் கண்டு வளர்ந்தவர்கள் இம்மாணவர்கள். எனவே தான் அவர்கள் கண்களில் தங்களின் இன்பக் கனவுகளை விட அவர்களின் அம்மா அப்பாக்களின் நம்பிக்கைச்சுடர் தான் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இங்கே வாழும் அமெரிக்க மாணவர்களின் கதி என்ன தெரியுமா...? அளவு கடந்த செல்வம், சிறுவயது முதலே கவலையற்ற, கண்டிப்பற்ற வாழ்க்கை, அதனால் உருவான ஒரு வித சலிப்பு,பிரமிடுகளில் அடைபட்டது போன்ற மூச்சு திணறல் வாழ்நிலை, தொலைந்த எதையோ தேடுவது போல் ஒவ்வொரு நொடியும் அலைந்து திரியும் நிலை, எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலை போன்ற வெறுமை மிகுந்த நிலையில் இவர்கள் இங்கே தவிக்கிறார்கள். அமெரிக்கர்கள் தன்னம்பிக்கை எனும் ஒரு வேற்று மேலங்கியை தங்கள் பாதுகாப்பாக நினைத்து அணிந்து திரிகிறார்கள். இறுக்கமான நிலையில் ஒருவருடன் ஒருவர் இணைந்து பின்னர் தங்களுக்கு தாங்களே சூழ்நிலையில் இருந்து தப்பிக்கும் பொருட்டு அதற்கு,"இது ஒரு சாகசம்" எனப் பெயரிட்டு மகிழ்கின்றனர். டீனேஜ் பெண்கள் தங்கள் அம்மா, அப்பாவை விட தங்களுடன் டேட் செய்யும் பாய் பிரண்ட்ஸ்களை சூப்பர் மேன்கள் போல் பாவித்து அவர்கள் மேல் அதிக அளவு நம்பிக்கை வைக்கின்றார்கள். ஒவ்வொரு வார இறுதியிலும் உறுதியில்லாத நூல் இலை போன்ற இந்த நட்பால் உடைந்து போய் அதை இரண்டாம் முறை மூன்றாம் முறை என உறவை புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் பார்க்குகள், பப்புகள், டிஸ்கோத்துகள் என அழைந்து தாங்களாகவே புதிது புதிதாக கற்கும் ஆர்வத்தில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வலியால் துடிக்கும் நிலைக்கு ஆளாகி விடுகின்றனர்." "என்ன..! நம் நாட்டு மாணவர்களுமா..?" "இல்லை... இல்லை... ஒருக்காலும் இல்லை.. நாங்கள் எல்லோரும் தங்கள் கண்காணிப்பில் குற்றமற்ற நிலையில் பார்சல் செய்து அனுப்பி வைக்கப்பட்ட' ஹேண்டில் வித் கேர்' என அனுப்பி வைக்கப்பட்டவர்கள் ஆயிற்றே! கடிவாளம் போடப்பட்ட குதிரைகளைப் போன்ற நல்ல பிள்ளைகள் ஆயிற்றே! வெளிநாட்டிலும் நம் பரம்பரை மாறாமல் நம் நாட்டின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் மதிப்புமிக்க குடிமக்களாகும். அம்மா, உங்கள் பையன் மிகவும் பாதுகாப்பாக மூன்று வருட படிப்பை முடிக்க இன்னும் ஆறு மாதங்கள் தான் உள்ளன. ஆம்... இரண்டரை வருடங்கள் ஓடிவிட்டன! இன்னும் சில போன் கால்கள்... ஏர்மெயில்கள்தான்.. அப்புறம்... நேரில் வந்து விடுவேன்... காத்திருங்கள்!


தொடரும்....


Rate this content
Log in

Similar tamil story from Classics