STORYMIRROR

Hari Arjun

Drama

4  

Hari Arjun

Drama

நடனத்தின் நர்த்தனம்

நடனத்தின் நர்த்தனம்

1 min
7

காட்டின் மடியில், நதியின் கரையில்,

கமல மலர்கள் கனவு தொடர்ந்த நிலையில்,
வாழ்ந்தாள் ஒரு மங்கை, நடனத்தின் உருவம்,
அவள் பெயர் மதுரா, அழகின் பொருளம்.

நிலவின் துண்டு அவள் முகத்தில் ஒளிர,
நீரோடை மெல்ல அவள் மேலே மிளிர,
அவள் கைகள் அசைய, வானம் திறக்கும்,
அவள் பாதம் பட, பூக்கள் சிரிக்கும்.

ஆனால், மங்கையின் இதயம் தனித்து  தவித்து இருந்தது,
நடனத்தில் மட்டும் உயிர் யாசித்தது.
கிராமத்து மக்கள் அவள் கலையை ரசித்தனர்,
ஆயினும், அவள் தனிமை யாருக்கும்‌ தெரியவில்லை.

ஒரு மாலை, வான் மூடிய  வேலையில் 
வந்தான் ஒரு வீரன், வீணையுடன் தேனிசை‌ பிணைந்து மாரி பொழிய,
அவன் இசையில் இருந்தது பெருங்காதல் கீற்று,
மதுராவின் நடனம் அதற்கு இணையான திறல்

வீணையும் நடனமும்‌ விதண்டாவாதம் பேசாமல் ஒன்றுடன் ஒன்று இணைந்து,
வானமும் மண்ணும் அவர்களுக்கு சாட்சியாய் பிணைந்தது.

மதுராவின் தனிமை இனிமையாக‌‌  மாறியது வீரனின்‌ வீணையின் மகிமை  , செல்வியின் சலங்கையின்  இணைமை.
அவள் இதயத்தில் கொட்டிய இசையில் புது வாழ்வு கண்டது.

நடனமும் இசையும் காதலாய் ஆட,
மங்கை மதுரா, உலகுக்கு உரைத்தாள்,
"கலை உயிரின் மொழி, காதல் அதன் பயணம்."நதியும் மலரும் அவர்க்கு ஆசி கூற,
வீரனும் மங்கையும் வாழ்ந்தனர் பூரணமாக.

- ஹரி பிரசன்னா



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Drama