STORYMIRROR

shameem a

Classics

4  

shameem a

Classics

மன அமைதி

மன அமைதி

2 mins
360

அவர் ஒரு விவசாயி. அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் ஒரு சிறிய பண்ணை வீட்டில் இருந்த அவர், பல ஆண்டுகளாகத் தன் கையில் ஒரு கடிகாரம் கட்டியிருந்தார்.


அவரைப் பொறுத்தவரை அது வெறும் கைக்கடிகாரம் அல்ல.சென்டிமென்ட். பல நல்ல தருணங்கள், வெற்றிகள் அவருக்கு நிகழ்ந்ததற்கு அந்தக் கடிகாரம் தான் காரணம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது.


ஒருநாள் பண்ணை வேலையெல்லாம் முடிந்து வெளியே வந்த பிறகு தான் கவனித்தார். அவர் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைக் காணவில்லை.


உடனே பரபரப்பாகி, தன் விவசாயக் கிடங்குக்குள் (Barn) போய்த் தேட ஆரம்பித்தார். எவ்வளவு நேரம் தேடியும் கடிகாரம் கிடைக்கவில்லை. கவலையோடு வெளியே வந்தார்.


அவருடைய கிடங்குக்கு வெளியே சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.


அவருக்கு உடனே ஒரு யோசனை வந்தது.. “டேய்... பசங்களா!” என்று அழைத்தார். சிறுவர்கள் ஓடி வந்தார்கள்.


இந்தக் கிடங்குக்குள்ள என் கடிகாரம் காணாமல் போயிடுச்சு. கண்டு பிடிச்சு கொடுப்பர்களுக்கு அருமையான பரிசு ஒண்ணு தருவேன்” என்றார்.


மாணவர்கள் துள்ளிக் குதித்தபடி, அவருடைய வேளாண் கிடங்குக்குள் ஓடினார்கள்.


அத்தனை பேரும் உள்ளே இருந்த வைக்கோற்போர், புல், பூண்டு, இண்டு, இடுக்கு விடாமல் தேடியும் கிடைக்கவில்லை.


சோர்ந்து போனவர்களாக வெளியே திரும்பி வந்தார்கள். விவசாயியிடம், “மன்னிச்சுக்கங்க ஐயா, எங்களால கண்டுபிடிக்க முடியலை’’ என்றார்கள்..


அந்த நேரத்தில் விளையாட்டு ஒரு சிறுவன் அவரருகே வந்தான்.


ஐயா, எனக்கு மட்டும் இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் அந்த கடிகாரம் கிடைக்கிறதா? என்று முயற்சி செய்து பார்க்குறேன்’’ என்றான்.


சிறுவன் கிடங்குக்குள் நுழைந்தான். கதவைச் சாத்திக் கொண்டான். அவன் உள்ளே நுழைந்து பதினைந்து நிமிடங்கள் தாம் ஆகியிருக்கும். கதவு திறக்கப்பட்டது.


வெளியே வந்தான். அவன் கையில் காணாமல் போயிருந்த அவரின் கடிகாரம் இருந்தது. அவருக்கு ஒரே ஆச்சரியம்..


தம்பி... நீ மட்டும் எப்படி சரியா கடிகாரத்தை கண்டு பிடிச்சே?’’ என்று கேட்டார்.


ஐயா... நான் உள்ளே போய் ஒண்ணுமே செய்யவில்லை... கிடங்குக்கு நடுவில் கண்ணை மூடி உட்கார்ந்து இருந்தேன்..


ஐஞ்சு நிமிடம் அப்படியே காத்திருந்தேன். அந்த அமைதியில கடிகாரத்தோட `டிக்...டிக்... டிக்...’ சத்தம் கேட்டுச்சு. சத்தம் வந்த திசைக்குப் சென்றேன், கடிகாரத்தை கண்டு பிடித்தேன் என்றான்..


*மன அமைதி’ என்கிற இரண்டெழுத்து வசப்பட்டால் போதும்... எதிலும், எங்கும் வெற்றியே!*


*ஆனால், எல்லோருக்கும் எளிதாக அது வாய்ப்பது இல்லை.*


*பரபரப்பான மனம் கொண்ட ஒருவரை விட, மன அமைதியுள்ளவர் சிறப்பாகச் சிந்திப்பார்.*


*தினமும் கொஞ்ச நேரத்தை, மனதை அமைதிப்படுத்தச் செலவழித்துப் பாருங்கள்...*


உங்களால் எவ்வளவு அற்புதமாக, சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை நீங்களே அறிவீர்கள்.


Rate this content
Log in

Similar tamil story from Classics