Vadamalaisamy Lokanathan

Abstract

5  

Vadamalaisamy Lokanathan

Abstract

மிருகம்

மிருகம்

1 min
456


மிருகம்.


ஒரு மிருகத்திற்கு கூட உணர்ச்சி இருக்கும்,உன் மனசு என்ன கல்லா என்று பாபுவை பார்த்து அவனுடைய தாயார் மங்களம் கேட்டுக்கொண்டு இருந்தார்.

உண்மை தான் பாபு அவ்வளவு எளிதில் உணர்ச்சி வச ப்பட மாட்டான்.அவனுடைய வேலை அப்படி.அரசாங்க மருத்துவ மனையில் பிணவரையில் வேலை செய்து வருகிறான்.இறந்து போன சடலங்களை பரிசோதித்து சொல்லும் வேலை.மருத்துவர் எப்படி சொல்கிறாரோ அது போல சடலத்தை அறுத்து,பரிசோதனைக்கு பிறகு,அதை சரியான முறையில் துணியில் கட்டி கொடுக்கும் வேலை.

அதனால் அவனுடைய மனம் இறுகி போய் இருந்தது.

மிருகத்தனமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சடலம். கற்பப்பளித்து

கொலை செய்ய பட்ட பெண்களின் சடலம் என்று,தினமும் பார்த்து பார்த்து,அவனும் கல்லாகி போய் இருந்தான்.

மிருகங்கள் மனிதர்களை தாக்கும் போது,அவனுக்கு வலிக்குமா என்று நினைத்து பார்ப்பது இல்லை.

மிருகத்திற்கு வேண்டியது

அதன் பசி தீர்க்க இரை.

அது போல மனிதர்களும் மிருகங்களாக மாறி சக மனிதர்களை தாக்கி உயிரை பறித்த கொள்வதில் என்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை.

சடலங்களையும்,அதை தாக்கி கொன்ற மனித மிருகங்களும் அவனை கல்லாக்கி விட்டது.

அவனால் அழ முடியவில்லை,சிரிக்க முடியவில்லை,ருசித்து உண்ண முடியவில்லை.சில நேரங்களில் மிருகங்கள் கூட கருணை காட்டுகிறது.

ஆனால் மிருகத்தனமாக செயல்படும் மனிதனிடம் எந்த வித கருணையும் எதிர்பார்க்க முடியாது.


அன்று வந்த பிணம்,சொந்த மகனால் கொல்லப்பட்ட தந்தையின் உடல்.தந்தை என்று கூட பார்க்காமல்,

குடிக்க பணம் தரவில்லை என்று தலையில் கல்லை போட்டுக் கொன்று விட்டான்.

ஆனால் எந்த மிருகமும்,தன்னுடைய இனத்தை கொல்லுவது இல்லை.

பாபுவிற்கு அன்று அந்த உடலை அறுக்க மனதில் முதன்முறையாக வலி ஏற்ப்பட்டது.


Rate this content
Log in

Similar tamil story from Abstract