களவாடல்
களவாடல்
"நேரம் போகலை சரி நமக்கு பிடிச்சித செய்யலாம் ஹிஹி கதை படிப்போம்" என் நினைத்து தன் ஃபோனை உயிர்ப்பித்து கதை தளத்திற்கு சென்றாள் சுந்தரி.
"அவனின் முகம்" அட கதையின் தலைப்பு நல்லாயிருங்கு சரி படிச்சி பார்ப்போம் என்று ஃபோனில் கதையை படிக்க தொடங்கினாள் சுந்தரி.
சுந்தரி ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். கதைகள் படிக்க மிகவும் பிடிக்கும்.அவள் ஒரு இளம் வளர்ந்து வரும் எழுத்தாளரும் கூட. இது வரை மூன்று கதையை பூர்த்தி செய்து உள்ளால் ஒரு தளத்தில்.
கதையை படித்து கொண்டு இருந்தாள். கதை செல்ல செல்ல இவள் முகம் மாறிக்கொண்டே வந்தது.முழுமையாக படித்து முடித்தால் கதையை.
பிறகு அக்கதையின் பதிப்பிட்ட விவரங்களை சரிபார்த்து கொண்டால்.
அந்த கதையின் ஆசிரியருக்கு தனிப்பட்ட குறுஞ்செய்தி செய்தால்.
"உங்கள் கதையை படித்தேன் மா. நீங்கள் நன்றாக எழுதியுள்ளீர்கள். ஆனால் இந்த பெருமை முழுமையாய் உங்களால் அடைய முடிகிறதா?. நமக்கு திறமை இருந்தால் அதை வெளிப்படுத்த வேண்டும் தான். உங்கள் கதை முற்றிலும் உங்களுடையதா? அது உங்களுடையது என்றால் மட்டும் தான் உங்களை சாரும் மா. இப்போது நான் யார் என்று தெரியும் உங்களுக்கு. நான் சொல்ல வருவது என்ன என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். முழுமையாக புரிந்தால் இனியொரு முறை இப்படி அடுத்தவரின் திறமையை களவாடாதீர்கள் மனசாட்சி என்று ஒன்று இருந்தால்.."
- உங்கள் மனசாட்சிக்கு தெரியும்
ஆம். இது சுந்தரியின் முதல் கதையின் கருவை மையமாக கொண்டது. சுந்தரியின் முதல் கதை அவ்வளவு பிரபலம் இல்லை என்றாலும் அழகிய கதைக்கருவைக் கொண்டது.
சுந்தரிக்கு இது மனதில் வலியை ஏற்படுத்தினாலும் இதை பெரிய பிரச்சினையாய் கொண்டு செல்ல விருப்பம் இல்லை. அவரின் தவறை திருத்தினால் நல்லது என்று விட்டு விட்டாள்.
இது முற்றிலும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்த அல்ல.
இந்த மாதிரி எல்லா இடங்களிலும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஒருவரின் திறமை அவர்களுக்கு மட்டும் தான் சொந்தம். அதில் பிறர்க்கு எவ்வித உரிமையும் இல்லை. அப்படி அந்த உரிமையை தாமே எடுத்துக்கொண்டால் அதுவும் ஒரு பெருங்குற்றமே ஆகும்.
