Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!
Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!

Thangam 916

Crime Thriller

4.0  

Thangam 916

Crime Thriller

கல்லூரி மர்மம்

கல்லூரி மர்மம்

4 mins
22.5K


அது ஒரு பொறியியல் கல்லூரி..அங்கு ஒரு விழா கோலாகலமாய் நடந்து கொண்டிருந்தது..அந்த விழாவை சிம்போசியம் என்று அழைப்பார்கள். பிற கல்லூரி மாணவர்கள் ஒரு கல்லூரிக்கு வந்து தங்களது படிப்பு மற்றும் கலை திறமைகளை காண்பிப்பார்கள்..மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும் அந்த விழாவில் இரண்டாவது நாள் ஆடல் பாடல் போட்டிகள் வைப்பது வழக்கம்..அது அந்த விழாவின் இரண்டாம் நாள்..கல்லூரியில் உள்ள எல்லா மாணவர்களும் மகிழ்ச்சியில் திளைத்த நாள் அது..

மதியம் ...


எல்லோரும் சாப்பிட ஒருவருக்கொருவர் முந்தி அடித்துக் கொண்டு சென்றனர்.."இந்த முகிலனை எங்க?..ஏய்! பவித்ரா முகிலனை பாத்தியா??" என்று மிருதுளா தனது எதிர்க்க வந்த பவித்ராவிடம் கேக்க.."இல்லையேடி!!சாப்பாடு போட்டுட்டாங்களாம் வாடி போய் சாப்பிடலாம்" என்றாள் பவித்ரா..."இல்லடி நான் முகிலனை பாத்துட்டு வரேன் நீ போ"என்றாள் மிருதுளா..உனக்கு எப்போதான் இந்த முகிலன் பைத்தியம் விடுமோ என்று கூறி தலையில் அடித்தபடி பவித்ரா சென்றாள்..


மிருதுளா முகிலனை தேடி ஒவ்வொரு வகுப்பு அறையையும் திறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்..அனைத்தும் வெறிச்சோடி போய் இருந்தது...அப்போது நூலகத்திலிருந்து ஓர் மரண ஓலம்..அது முகிலனின் குரல் தான் அதில் மாற்று கருத்தே இல்லை என்று எண்ணிய மிருதுளா..சத்தம் வந்த இடத்தை நோக்கி நடந்தாள்..நூலகத்திற்குள் சென்றாள் அங்கு யாருமே இல்லை... மெதுவாக முகில் முகில் என்று கூறிக்கொண்டே முன்னேறி மிருதுளா சென்றாள்..அப்போது ஒரு ஓரத்தில் யாரோ இருப்பது போல் தெரிந்தது..முன்னேறி மெதுவாக சென்றாள்..அப்போது அங்கு இருவர் இருந்தனர். அவர்இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நேர் மறையாக நின்று கொண்டிருந்தனர்..


மிருதுளா தனது தலைகளை அசைத்து யார் என்று பார்க்க முயல்கிறாள் 'தொப்'பென்று அதில் ஒருவன் விழுகிறான். விழுந்தவனின் வயிற்றில் இருந்து இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக பரந்து விரிந்து வழிந்தோடிக் கொண்டிருந்தது..அதிர்ச்சியில் மிருதுளா .. அது முகிலனின் சடலம்..அதிர்ச்சியில் உறைந்த மிருதுலா தனக்கு முன் நின்ற உருவத்தின் பின் புறத்தை கண்டாள். ஆனால் அந்த உருவம் தனது கையில் கத்தியை

பிடித்திருக்க..


படக்கென்று அந்த உருவம் மிருதுளாவை நோக்கியது.. சூரிய ஒளி பட்டு கத்தி மின்னியது ..அலறியடித்து மிருதுளா அங்கிருந்து ஓடினாள்....அவளை அவன் பின்தொடர்ந்தான்... மிருதுளாவின் நெஞ்சு படபடக்க.. வியர்வை முகத்தில் ஆக்கிரமிப்பு செய்ய..கை கால்கள் நடுக்கம் கொண்டிருக்க..அப்போது அவளுக்கு ஒரு எண்ணம் மட்டும் தான் நூலகத்தை விட்டு வெளியேறுவது..வாசல் அருகில் சென்ற அவள் தடுக்கி விழுகிறாள்...அவனும் பின்னாடி வர....மிருதுளாவிற்கு எதிர்த்து வந்த ஒருவன் விழுந்த மிருதுளாவை தாங்கி பிடித்தான் அது லைப்ரரியன்.."ஏம்மா இப்படி ஓடி வர என்னாச்சு??"என்று அவன் கேக்க.."அதோ அதோ என்று திக்கு முக்கு குரலில் தனது நடுங்கிய கைகளை அந்த உருவத்திற்கு எதிராக உயர்த்தினாள்...


இரண்டு வருடங்களுக்கு முன்பு...

காலேஜ்னா யாருக்குத்தான் பிடிக்காது..பிளஸ் 2 முடிச்சிட்டு கூண்டு பறவைகளை பறக்க விட்டார் போல பறந்து காலேஜ் எனும் கூண்டினுள் அடைக்கப்பட்டனர்..எல்லோர் கதையும் கல்லூரியில் மோசமாக இருக்காது ..ஆனால் இவர்களது கதை விதிவிலக்கானது.

முதல் நாள் ..வரவேற்பு விழா அந்த பொறியியல் கல்லூரியில் கோலாகலமாக நடந்தது ..துள்ளித்திரியும் மான்கள் பல வித எதிர்பார்ப்புகளோடு அமர்ந்திருந்தனர். அப்படித்தான் ராஜாவும் வரவேற்பு விழாவில் அமர்ந்திருந்தான் பல வித கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும்..அவனது அருகில் முகில் .ஒருவரை ஒருவர் அறிமுகம் படுத்தி கொண்டனர்..இருவரும் அதிர்ஷ்ட்டவசமாக ஒரே பிரிவு ..அப்படி என்றால் ஹாஸ்டல் ரூம் ஒரே ரூம் அல்லது பக்கத்து ரூம் இல் இருவரும் வருவர்...


ராஜா கோவையை சேர்ந்தவன் அவனது உச்சரிப்பு அனைவரின் மனதையும் பறிக்கும்...அவனது தந்தை பழம் வியாபாரி...முகிலன் அருப்புக்கோட்டையை சேர்ந்தவன் சொல்ல போனால் மதுரை அருகில்..சொல்லி வைத்தார் போல இருவரும் ஒரே அறை..ஹாஸ்டலில் ராக்கிங்(ragging) தலை விரித்தாடிய நேரம் அது..


மூத்த மாணவர்கள் புதிய மாணவர்களை வம்பிழுப்பது வழக்கம் சில சமயம் அந்த விளையாட்டு உச்ச வரம்பை கூட எட்டி விடும் ...அடிதடி வார்டன் உடன் பஞ்சாயத்து என்று முடிந்து விடும்..பொதுவாக முதலாம் வகுப்பு மாணவர்கள் காலேஜ் சீனியர்களுக்கு மதிப்பு மரியாதை குடுக்க வேண்டும் என்று ஒரு சட்டம் உள்ளது.. அந்த சட்டத்தை இயற்றியது மூத்த மாணவர்களே .. 'அன்ட்டிராக்கிங் கமிட்டி'(anti ragging committee) *ரக்கிங் செய்வோர்க்கு எதிரான இயக்கம்* இருந்தும் பயனில்லாமல் இருந்தது ..இதை எல்லாம் பார்த்து முகிலனுக்கும் ராஜாக்கும் மனது தூக்கி வாரி போட்டது ஏன் என்றால்..கல்லூரி மற்றும் ஹாஸ்டலில் முழு சுதந்திரம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட போதிலும் சீனியர்கள் போடும் சட்டங்கள் மனதில் பீதியை கிளப்பும்...


இரவு 10 மணி மேல் லைட் எரிய கூடாது....

ரூம் விட்டு வெளியே வந்து போனில் கடலை போடக் கூடாது...

வெளியே சகத் தோழிகளோடு ஊர் சுற்ற கூடாது என்று...

சட்டை பட்டனை திறந்து விடக் கூடாது என்று விதி முறைகளை அடுக்கி வைத்தனர் முதல் நாள் சீனியர் புது மாணவர்களுக்கு வைத்த மீட்டிங்கில்...

முகில்: வார்டன்னே ஒன்னும் சொல்ல மாட்டானுங்க போல இவனுங்க ரொம்ப ஓவரா போறாங்கலே!! என்று அலுத்து கொண்டான்...


ராஜா ரூமிற்க்குள் சென்றான். ஒரு ரூமில் 8 பேர் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலைமை..தனது வீட்டை விட்டு வந்த துக்கம் போதாத குறைக்கு சீனியர்கள் செய்யும் வம்பு ..இப்போ ரூமில் 8 பேரா என்று மனதினுள் புலம்பியவாறு வந்தான்..ஆனால் முகில் அனைவரிடத்திலும் எளிதாக பழகும் தன்மை உடையவன் ..அதனால் அவனுக்கு இது பெரிய காரியமாக தெரியவில்லை...


****************************************

முகிலன் கத்தி குத்துபட்ட நாள்..

நூலகத்தில்.....

"மூவ் மூவ் "என்று சொல்லி போலீஸ் நூலகத்திற்குள் சென்றது...ஏதாச்சும் தடயம் கிடைக்குத்தான்னு பாருங்க என்றான் கனகவேல்....அங்கு வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகத்தை போலீஸ் நோட்ட மிட்டது..அதில் ஒரு புத்தகத்திற்குள் மட்டும் ஏதோ அடைத்து வைத்தார் போல புடைத்து காணப்பட்டது...போலீஸ் அதை பார்த்தது..அந்த புத்தகத்தை எடுத்து பார்த்தான் அந்த போலீஸ்..."சார் இங்க வாங்க...."என்று அவன் அழைக்க...கனகவேல் விரைந்தான்.........


போலீஸ் ஒரு பாக்கெட்டை எடுத்து நீட்டினார்..போலீஸ் அந்த பாக்கெட் ஐ திறந்தான்...நுகர்ந்து பார்த்துவிட்டு "இது கஞ்சா தான்" இந்த காலேஜ்ல உள்ள எல்லாரோட பக்,பாக்கெட்லையும் செக் பண்ணுங்க...

போலீஸ் தீவிர தேடுதலில் இறங்கினர்...எதுவும் சிக்கவில்லை...சரி விடுதியில தேடுங்க என்று கட்டளையிட்டான் கனகவேல்.......

சிறிது நேரம் கழித்து...


ஒரு பையினுள் இருந்து கஞ்சா பொட்டலத்தை போலீஸ் கைப்பற்றியது....

திடுக்கிட்டான் அப்துல்,ராஜா...ஆம் கைப்பற்றியது அவர்களது அறையிலிருந்து.....

இது யார் பை என்று கனகவேல் கேட்க...அப்துல் ராஜாவைப் பார்த்தான்....ராஜா ஒன்றும் புரியாதவனாய் நின்றான்...ஏனென்றால் எடுத்தது ராஜாவின் பையிலிருந்து...

இப்பொழுது...


போலீஸ் கனகவேல்: என்ன யோசிக்க உன்கிட்ட கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவே இல்லையே?? ...

ராஜா முகிலனுடன் நடந்த தனது முதல் நாள் அனுபவத்தை நினைத்த படியே போலீசிடம் பேச ஆரம்பித்தான் திக்கு முக்கு குரலில்.. ..

ராஜா:ஆமா சார் முகிலன எனக்கு காலேஜ் முதல் நாள்ல இருந்தே தெரியும் அவன் என்னோட பெஸ்ட் ..


போலீஸ்: டைரக்ட் ஆஹ் மேட்டர்க்கு வா உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன பிரச்சனை?

ராஜா பதட்டத்துடன் போலீஸ் கனகவேலை பார்த்தான்.

"அதெல்லாம் இல்லையே" !! என்று போலீஸ் கூறியதை ராஜா மறுக்க..

போலீஸ்: மிருதுளா தெரியுமா?

ராஜா: ஹ்ம்ம் தெரியும் என்னோட கிளாஸ்மேட் தான் ..

போலீஸ்: வெறும் கிளாஸ்மேட் தானா??


ராஜா: பிரண்ட் சார்...முகில் எனக்கு எவ்ளோ முக்கியமோ அதே மாதிரி தான் மிருதுளாவும்..

போலீஸ்: இங்க பாரு தம்பி ..நான் கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லணும்...நீ இப்படியே சொல்லிட்டு இருந்தீனா முழு கேசையும் உன் மேல போட்டுட்டு போய்ட்டே இருப்பேன்..


ராஜா: இப்போ நா என்ன தப்பா சொல்லிட்டேன்?? மிருதுளா என் பிரண்ட் ஆஹ் இல்ல கிளாஸ்மேட் ஆஹ் ன்னு இப்போ முக்கியமா உண்மையான குற்றவாளிய கண்டுபிடிங்க ...

போலீஸ்: உன்னோட பெஸ்ட் பிரன்ட் மிருதுளா தான் சொன்னா உனக்கும் முகிலனுக்கும் ஏதோ பிரச்சனை இருக்குனு ..உண்மையா?


ராஜா: ஆமாம் ..இருந்துச்சு..ஆனா இப்போ இல்லை..

போலீஸ்: இப்போ எப்படி இருக்கும்?? அதான் கொன்னுட்டியே!!!அது மட்டுமில்லாம உன்னோட பையில கஞ்சா இருந்திருக்கு..


என்ன??கஞ்சாவா ..என்ன சார் சொல்றீங்க?எனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லை யாரோ கேஸ்ச டைவெர்ட் பண்ண பாக்கங்க.. நான் என்னோட நண்பன கொலை செய்வேனா?? என்று தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு தவறுகளையும் "இல்லை சார்" என்று ராஜா மறுக்க..

போலீஸ் ராஜா கன்னத்தில் பளார் என்று ஒரு அறை அறைந்தான்..

போலீஸ்: கான்ஸ்டபிள் இவன போலீஸ் ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு போங்க அங்க நம்ம ஸ்டைல்ல தம்பிட்ட விசாரிப்போம் ..


கான்ஸ்டபிள் ராஜாவை காலேஜிலிருந்து காரில் ஏற்றினர்..ராஜா சுற்றும் முற்றும் பார்த்தான் எல்லாரும் அவனை பார்த்தனர்..மிருதுளா கண்களில் கண்ணீருடன் ராஜாவை குற்றவாளியை பார்ப்பது போல் பார்த்தாள்..



Rate this content
Log in

More tamil story from Thangam 916

Similar tamil story from Crime