Madhu Vanthi

Tragedy Action Others

4.7  

Madhu Vanthi

Tragedy Action Others

ஏலியன் அட்டாக் - 11

ஏலியன் அட்டாக் - 11

3 mins
333


டாக்டர். வில்சனின் கார் பெரும் சீற்றத்துடன்  அவர்களின் விட்டின் முன் வந்து நின்றது.........


"என்ன சார்..? எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருகிங்க..?", முகிலன் எதற்சயாக கேட்டான்.


"இது உங்க வீடா?", வில்சன் அதிர்ச்சியில் திகைத்தான்.


"அப்போ நீங்க எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரலையா?", முகிலன் வினவினான்


"எனக்கு இப்படி தம்பி உங்க வீட்டு அட்ரஸ் தெரியும்...... கொஞ்சமாவது யோசிங்க......... நிஜமாகவே இது உங்க வீடு தானா?", அவர் மீண்டும் ஒருமுறை தன் சந்தேகத்தைக் கேட்டார்.


"ஆமா சார்.... இது எங்க வீடு தான், ......

ஏன்? , அதுல எதாச்சும் பிராப்ளம் - ஆ சார்?",

அணு வினாவினாள்.


இது டாக்டர். கண்ணனோட வீடு ......

அவன பாக்க தான் நான் இங்க வந்தேன்.....

நீங்க உங்க வீடுனு சொல்றீங்க.....? அப்போ அவன் ?, வில்சனின் பதில் மூவருக்கும் குழப்பத்தை தான் உருவாக்கியது..... பயத்தையும் தான் .


அவர் வீடுனா அப்போ அவர் தான் எங்களுக்கு ரெண்ட் - கு குடுத்து இருக்காரா?" , மாயா தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினாள்.

அதே சமயம் அவளுக்குள் புதிய கேள்வியும் எழுந்தது. அப்போ கண்ணன் சாருக்கு வார்ணிங் கொடுக்க தான் அந்த மெஷின் வந்துச்சோ? நம்மள வார்னிங் பண்ண இல்லையா? அவள் தன் மைண்ட் வாய்ஸில் தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.


இவர்கள் குழப்பத்தில் மூளையைக் குழப்பிக் கொண்டிருந்த அதே நேரம், " சார் உங்க ஃப்ரென்ட் னு தானே சொன்னீங்க அப்பறம் அவங்க எங்க இருக்காங்கன்னு கூடவா தெரியாம இருக்கீங்க?", முகிலன் தன் சந்தேகத்தை டாக்டர் வில்சனிடம் கேட்டான்.


"ஆமா தம்பி ..... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே தான் அவன் என் பிரண்டா இருந்தான்...... இப்போ எனக்கும் அவனுக்கும் அவ்வளவா பழக்கம் இல்லை. அதனாலதான் அவன் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இருந்த அதே வீட்டுக்கு வந்தேன். ஆனா அவன் இந்த வீட்டை ரெண்ட்க்கு விட வாய்ப்பே இல்லை. அவன் இப்ப எங்க இருக்கான்னு கூட தெரியலையே இந்த ப்ராப்ளம அவனாலதான் ஸால்வ் பண்ண முடியும்" , வில்சன் குழப்பத்தில் ஆழ்ந்தான்.


"ஏன் சார்?, இந்த வீட்டில அப்படி என்ன ஸ்பெஷல் ஆ இருக்கு?....... அவர் ரெண்ட்க்கு விட முடியாத அளவுக்கு?, அணுவின் கேள்விக்கு அனைவரும் பதில் எதிர்பார்த்து நின்றனர்.


ஏன்னா அவனோட ஏலியன் பிரண்டுக்கு இந்த வீட்டு அட்ரஸ் மட்டும்தான் தெரியும் அவன் வேற எங்க போனான்னு அவங்களால கண்டுபிடிக்க முடியாது அதனால அவன் இந்த வீட ரெண்டுக்கு விட வாய்ப்பே இல்லை."


"ஓ ...! , அப்படியா சார் ..." , முழுமையாகப் புரியாமல் இருந்தாலும் ஏதோ புரிந்தது போல் முகிலன் பதிலளித்தான்.


"சார் ......, ஆனா எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை .... நல்ல பிரண்ட்ஸா இருந்த நீங்க எப்படி பிரஞ்சிங்க?", மாயா தன் கேள்வி எழுப்பிய அதே சமயத்தில் வில்சனின் முகம் வெளிறிப் போனது ஆனால் அவர்கள் அதை சரியாக கவனிக்கவில்லை.


"அதப் பத்தி இப்ப பேச வேண்டாம் பா இப்ப நம்ம வீட்டுக்குள்ள போலாம் அந்த மெஷின் எங்க இருக்கு எனக்கு இப்பவே காட்டுங்க அதை நான் சர்ச் பண்ணனும்".


மூவரும் சரி என்று கூறி வீட்டினுள் சென்றனர். வீட்டிற்குள் வந்த நால்வருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது .... வைத்த பொருள் எதுவும் வைத்த இடத்தில் இல்லை. யாரோ வீட்டிற்குள் நுழைந்து அனைத்தையும் கலைத்து வைத்தது போலிருந்தது.


அனைவருக்கும் அதிர்ச்சி .... " பூட்டின வீட்டுக்குள்ள யார் வந்திருப்பார் " , அனு அதிர்ச்சியில் கேட்ட அதே சமயம் வில்சனின் பதில் வந்தது.


"இது கண்டிப்பா அந்த ஏலியன்ஸ் ஓட வேலையா தான் இருக்கும் ... அவங்க இங்க வந்து இருக்காங்க ..... இதை என்னால நிச்சயமா சொல்ல முடியும் " , வில்சனின் பதில் மூவருக்கும் அச்சத்தை உண்டாக்கியது.


திடீரென்று ஏதோ நினைவு வந்தவை போல வேகமாக ஒரு அறையை நோக்கி அனு ஓடினாள் . அப்போது இருவருக்கும் நினைவு வந்தது அந்த மெஷின் அங்கு தான் இருக்கிறது என்று.


மூவரும் அவளை பின்தொடர்ந்து ஓடினர் அங்கு அந்த மெஷின் வைத்த இடத்தில்.............. 


பத்திரமாகவே இருந்தது.... நால்வரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்


"சார் கண்டிப்பா வீட்டுக்குள்ள ஏலியன்ஸ் வந்து இருக்காங்கன்னு சொல்லுறீங்க.... ஆனா இந்த மெஷினை யாரும் எடுத்துட்டு போகல..... அப்ப அவங்க எதுக்காக இங்க வந்தாங்க? " , அனுவிற்கு அந்த விஷயம் புரியவே இல்லை.


பாவம் இந்தக் கேள்விக்கு அவருக்கு பதில் தெரியவில்லை போலும் தன் உதட்டை பிதுக்கி காட்டினார்.


"ஹ்ம்ம்ம்...... இந்த லீவு ரொம்ப நல்லா போகும்னு நெனச்சேன் ........ பட் இப்படி பிரச்சனை வருதே...!" , முகிலன் தன் மனதில் பட்ட கருத்தை சிரித்துக்கொண்டே கூறினான்.


டிஏன்டா உனக்கு வெளையாட வேற நேரம் காலம் தெரியலையா டா ....?, எரும மாடு...", தன் தம்பியை அணு கடிந்து கொண்டாள் ஆனால் அவர் மனதிலும் அதே எண்ணம்தான் தோன்றியது.


                          _தொடரும்..........



Rate this content
Log in

Similar tamil story from Tragedy