வளையல்கள்
வளையல்கள்
கல கல என்று வளையல்கள் சிரித்தன.
அந்தக் கலீர் கலீர் சத்தம்
யாவரும் மனத்தையும் கவர்ந்தது
அந்த. மணப்பெண்ணின் கைகளில்
பதிந்து நிறைன்த அந்த வளைகள
அவளுடைய. தங்கம் வைரத்தைவிடஅதிகமாக மின்னியது. வளையல் கலகலக்க.
அந்தப்பெண் முகம் நாளைக் கனவுகளில்
விரிந்துது கொண்டே இருந்தது விரிந்தது
அவள் கைவிரல்கள் மென்மையாக அந்தப் பச்சை
சிகப்புபுள்ளி வளையல்களில் பதிந்தது
நாளைப் புது வாழ்க்கையின் கனவுகள் மிதந்தது
ஆனால், கலகலக்கும் அந்த. வளையல்களின் ஒலியின் பின்னால்
ஒருவரும் காணாத்தது அந்தப்
பிஞ்சு குழந்தையின் கைகளை.
கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் எதிரில் அமர்ந்து அவன்
அந்த வளையல்களைத் திருப்பித் திருப்பிவிட்டான
சட்ட இல்லா அவன் உடம்பு ஒரு எலும்புக்கூடு
பிணைக்கப்பட்ட அடிமை வாழ்க்கையில்
உலகத்தின் கண்ணுக்குத் தெரியாமல். நூற்றுகணக்கான. சிறுவர்கள் அங்கு வளையல்கள் செய்தார்கள் இரவில்
இரவுதான் திருட்டு வேலைக்குபோலீஸ் சோதனையின்றி
அவர்கள் அறியார் யார் இந்தவளையல்களை அணிவார்கள்
அவர்கள் நினைப்பார்களா இந்த நெருப்புச் சுட்டக்
கைகளையோ, உடம்பையோ?
அங்குப் பல நிறங்களில், பச்சை, சிகப்பு. ஊதா
வர்ணங்களில் உருவாகும் வளையல்கள்
ஆனால் நிஜத்தில் எல்லா வர்ணங்களுமே
இந்தக் குழந்தைகளை வருத்திச் செய்த
இரத்தத்தின் சிகப்பு நிறமே
