ஒற்றை மல்லிகை
ஒற்றை மல்லிகை
வாசம் மிகுந்த ஒரு ஒற்றை மல்லிகை
ஒரு சிறிய இலையுடன் இணைந்து
அமைதியாகத் தூணின் கீழ் காத்து இருந்தது
கோவிலின் படிகளின் அருகில
அந்தப் பெண் கோவிலில் நுழைந்தாள
நேர் கோட்டில் அந்தத் தூணை நோக்கிச் சென்றாள்
அந்த ஒற்றை மலரைக் கையிலேயே எடுத்து
கண்ணீர் பொங்கும் கண்களில் ஒற்றிக்கொண்டாள்
கைப்பையில் வைத்துக் கொண்டால் அந்த மலரை
ஆம் அந்த மலர் அவள் நீண்ட கருங்கூந்தலை
அலங்கரிக்க வைக்கப்படவில்லை
அந்த மலர் ஒரு செய்தி இருவருக்கு இடையே
இளமையும் அன்பும் பொங்கும்
இரண்டு இதயங்களை இணயமுடியாமல்
தடுக்கும் இந்தக் கொடூர உலகத்துக்கு.
