அவள் காத்திருந்தாள்
அவள் காத்திருந்தாள்
பரபரப்பாக அவள் படுக்கை விரிப்புகளை மாற்றினா
குழந்தைகள் புரளும்போது தூசிப்பட்டுவிடக் கூடாதென்று
முகம் பார்க்கும் கண்ணாடியைப் பளபளக்கினாள்
எங்கயாவது முகம் சுளிக்கக் கூடாது என்று
சில இனிப்புகள், காரம், பணியாரங்கள்
குழந்தைகளுக்கு ஆசையுடன் உண்பார்கள் என்று செய்தாள்
மேஜை மீது குழந்தைகளுக்குத் தேவையான யாவற்றையும்
கத்திரி., ஒட்டும் பசை, வர்ணங்கள், காகிதங்கள் என்று.
அவன் திரும்பத் திரும்பக் கடிகாரத்தை பார்த்தாள்
நேரம் ஓடியது., ஆனால் வாசல் மணி அடிக்கவில்லை
தொலைபேசி மணி அடித்தது,
அவள் மகன் பேசினார்
மன்னியுங்கள் அம்மா,
வேலை அதிகம், வர முடியாது, என்று
அவள் கண்கள் சோகத்துடன்,
கூட்டி வைத்த பொருள்களை நோக்கின
அவற்றைத் திருப்பி எடுத்தார்.
இனி அடுத்த ஆறு நாட்கள்
அவள் காத்திருப்பாள் அடுத்த சனிக்கிழமைவரை
அவள் பேரக் குழந்தைகளை ஆசையுடன் பார்ப்பதற்கு.
