வானவில்
வானவில்


நாவல்பழம் தந்த
கொடை ஊதா!
மயிலின் தோகை
கொடுத்த கருநீலம்!
வானம் கொடுத்த
கொடை நீலம்!
கிளியின் இறகு
தந்த பச்சை!
மைனா அலகு
தந்த மஞ்சள்!
கமலாபழம்
தந்த இளம்சிவப்பு!
சேவல் கொண்டை
தந்த சிவப்பு!
இவை அனைத்தும் ஒன்றாக்கிய
கடவுள் அளித்த வண்ணமாலை நானே!