உறவுகள்
உறவுகள்


மரங்கள் தாளமிட
சூரியன் வாழ்த்தொளி
பாட சிறியாநங்கையுடன்
போர்க்கோலம் பூண்டபடி
சுக்குகாபியைத் துணை வீரனாக்கி
வெங்காயத் தேரைச் சாரதியாக்கி
வேப்பிலை கலந்த மஞ்சள் சங்கை
வெற்றிச் சங்காக்கி உரசியே
கிராம்பு பட்டை திப்பிலி
கடுக்காய் படைக்கலன்களை நீராக்கி
ஏழைகளுக்கு துணையாக
தெருவெங்கும் தெளித்துவிட்டு
எண்ணெய் கலந்த
வைரிகளை ஒதுக்கிய
தீமையில்லாத சாதி மதமற்ற
நல்மனிதன் உலகெங்கிலும்
வெள்ளைப் புறா
கொடி பறக்கவிட்டு
கரோனா பேயை ஓட ஓட
விரட்டினானே!