தடங்கள்
தடங்கள்
நீ வாழ்ந்த வாழ்க்கை
தடங்கள் எனக்கு ஒரு
வழிகாட்டி!
உன்னால் இன்றளவு
நான் நிமிர்ந்து
பெருமையுடன் நிற்கிறேன்
கடவுளுக்கும் பெற்றவர்களுக்கும்
மரியாதை கொடுத்தால்
தள்ளி நிற்பது போல தோன்றும்
எனக்கும் உன்னை அதுபோலவே
பாவிக்கத் தோணுது!
கோடி பொன் கொடுத்தாலும்
உனது காலடி நிழல்
நடக்க யாரும் இல்லை
புகைப்படம் மாட்டியாவது
உனது புகழ் பாடி
இலஞ்சத்தொழில்
நடத்துபவரை உனது ஆன்மா
கேட்காதா கருப்பு காந்தி!