STORYMIRROR

Narayanan Neelamegam

Abstract

4  

Narayanan Neelamegam

Abstract

தொலைபேசியோ ....கைபேசியோ .....

தொலைபேசியோ ....கைபேசியோ .....

1 min
23.6K


தொடர்பு நிச்சயம் - ஆனால் 

தொலைத்தொடர்போ .......

தொல்லைத்தொடர்போ ......

தெரியாமல் அதன் வழியே .......!!!


கட்டிப்போட்டு வைத்த 

காலம் போய் - இப்போது 

கையோடு கையாக 

தெரிந்தே அதன் வழியில் .......!!!


ஐம் புலனும் அடிமையாகும் 

பஞ்ச பூதமும் சரணடையும்


நினத்தவரை 

நினைத்த - நேரத்தில்  

நிம்மதியாய் உரையாட  

தொலைபேசியோ .......

கைபேசியோ ......... 

நினைவை 

நிஜமாகும் ....................!!!


என்னை 

பொருத்த வரை - நீ 

நம்பிக்கையானவன் ......!!!


உன்னை 

பார்ப்பவர்.... 

கண்களை கவர்ந்து;

தூண்டில் மீனை போல்;

கண்ணாடி திரையில்;

காட்டுவதால் தானோ 

எல்லோருக்கும் - உனை 

பிடிக்க காரணம் .................!!!


நீ .....

வயது வரம்பு இன்றி 

இளமை முதுமை இன்றி 

நண்பன் பகைவன் இன்றி

ஏழை பணக்காரன் இன்றி 

எந்த ஒரு வேறுபாடும் இன்றி 

இருப்பதால் 

உன் காதல் புதிது .....

இது pandemic (தொற்று) காதலோ .........!!! 


Rate this content
Log in

Similar tamil poem from Abstract