தென்னை
தென்னை


ஆட்டிசக் குழந்தை
நான்தானே!
என்மேல் கடவுளுக்கு
ஏனிந்த கோபம்
என்றே மௌனமொழியில்
தென்னையிடம் பேச
விசிறியாய் கீற்றுகள்
ஆட்டிசக்குழந்தையை
தாலாட்ட
கடவுள் கருணை
உங்களிடம் நிரம்பவே
உண்டம்மா!
கெட்டநீர் ஊற்றினாலும்
தலையில் இளநீராய்
நான் சொரிய
பக்கத்துவீட்டு
சுவர் பிரச்னையில்
எனதுடம்பு இடித்ததால்
அமிலம் ஊற்றி
எனது முகம் சிதைத்த
மனிதர்களை கடவுள்
கரோனாவால் வாட்டுகிறான்!
இன்னா செய்தார்க்கும்
இனியது செய்யும்
மனப்போக்கு மனிதரிடம்
நிறையும்போது மட்டும்தான்
நோயின்றி வாழ
இறைவன் அருள் புரிவான்!