தேடல்
தேடல்
நிஜத்தினை விடாமல்
நிழலின் நினைவுகளை நாம் தேடி அலைகிறோம்...
இதயத்தின் சில இடுக்குகளில் கூட
சில நேரங்களில் சில தேடல்கள்
உள்ளத்தை அறியாமல்
வெளியிலே போலியாக நாம் தேடி
அலைகிறோம்
மனதின் ஓரங்களில் உள்ள சிறு காயங்களில் கூட
சில நேரங்களில் சில தேடல்கள்
வலியை தேடாமல்
வலியினை போல் நடித்து நாம் தேடி
அலைகிறோம்
உறவுகளிலும் உள்ள வேற்றுமைகளில் கூட
சில நேரங்களில் சில தேடல்கள்
காரணத்தை தேடாமல்
காரணத்தின் விளைவை நாம் தேடி
அலைகிறோம்
உணர்ச்சியில் உள்ள வலிகளில் கூட
சில நேரங்களில் சில தேடல்கள்
பல நேரங்களில் பல தேடல்கள் உண்டு
ஆனால்
சில நேரங்களில் சில தேடல்கள்
நாம் அலைகிறோம்
சில நேரங்களில் சில தேடல்கள்........

