புத்தகங்களும் பேசுமோ!
புத்தகங்களும் பேசுமோ!


அளவுக்கு அதிகமாய்
நூல்களுடன் பேசியதில்
மனிதர்களுடன் பேசாத
மனோபாவம் உருவாகியதோ!
அறிவை வளர்த்த புத்தகங்களுக்கு
ஒப்பாக மனிதர்களை எடை
போட்டு ஒப்பு நோக்க
கயமை மன மனிதர்களுடன் பேச
மனம் ஒப்பவில்லை!
விட நினைத்த பழக்கமென
எண்ணி விட்டாலும்
உறவுகளாய் கம்பளிப்பூச்சிகளாய்
குடும்ப உறவில் உறவாடி
வருகின்ற கொள்ளிக் கட்டைகளை
விரட்ட எங்கே செல்வது கங்கைக்கு?