பாசம்
பாசம்
கொரோனா காலம் ஊரடங்கு உத்தரவு
வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிற்கு சிறைக் கைதியாய்
காலை வாக்கிங் போவதற்கு இயலவில்லை
பூங்கா கதவு பூட்டி
வைத்திருக்கிறார்கள்
மரங்கள் பார்க்க ஏங்குகிறது மனம்
பறவைகள் பார்த்து சிலநாள்களாச்சு
குறுக்கும் மறுக்கும் இடையூறு செய்யும் நாய்கள் காணவில்லை
பாதையில் வாகனங்கள் போக்குவரத்து குறைந்திருக்கிறது
வெளியூரிலிருந்து பேரன் பேத்திகள்
அலைபேசியில் அழைத்து
பாதுகாப்பாக இருக்கச் சொல்லி
அறிவுறுத்துகிறார்கள்
தேவையான பொருட்கள் வாங்க முடியவில்லை
போக்குவரத்து நெஞ்சாலைகள்
வெறிச்சோடியிருக்கிறது
இன்னும் ஒருவாரம்
ஊரடங்கு நீடிப்பென அரசு சொல்கிறது
நான் வீட்டிற்குள் எத்தனை நேரம்தான்
புத்தகம் படிப்பது
செல்லில் பதிவுகள்
பார்த்து பதிவுகள் போடுவது
எப்படியோ, நேரத்திற்கு
சாப்பாடு ஓய்வு புணர்ச்சி
உறக்கம் என நேரம் கடந்து போகிறது
தீடீரென மின்சாரம் நின்று போனதால்
எத்தனை கடுப்பாகி விடுகிறது மனம்
இன்னும் மின்சாரம் வரவில்லை
காத்திருக்கிறேன் இருட்டில்...

