நீரில்லா நிலம்
நீரில்லா நிலம்


வண்ணக்கொடிகளின் அணிவகுப்பில்
மூண்டெழுந்த சாதித்தீ
வெறியில் முளைத்த
சுயநல அரிதார திரைப்பட சாக்கடைகள்
தன் பங்கிற்கு தலைவனாக
பதவி வகிக்கும் ஆசையில்
ஏழை மக்களை ஏமாற்றி
தங்க முலாம் பூசி
காத்திருக்கிறது!
வற்றிச் சுருங்கிய
கையில் காலி
நெகிழி குடங்களுடன்
செல்லிடபேசி கோபுரங்களை
அண்ணாந்து பார்த்தபடி
எதையோ பேசியபடி
புற்றுநோய்க்கு வரவேற்பு
வாசித்துக்கொண்டிருக்கிறாள்
செல்லிடபேசியில்!