STORYMIRROR

Shakthi Shri K B

Drama Classics Children

4  

Shakthi Shri K B

Drama Classics Children

முதல் நாள்

முதல் நாள்

1 min
297

முதலில் இந்த உணர்வு ஒரு புது விதமான அனுபவமாக இருக்கு,

மனதில் ஆயிரம் மாற்றங்களை உணர்கிறேன் இன்று நான்,

ஏன் இந்த நிலை என்று சிந்திக்க ஒரு நொடிக்கூட என்னிடம் இல்லை.


முகம் மலர்ந்து அளவற்ற மகிழ்ச்சியில் கால்கள் இரண்டும் நடனமாடுகிறது,

இதயம் நிக்காமல் துடிக்கிறது என் காதுக்கு மட்டும் கேட்கும் இசையிக்கு,

என்னை அறியாமல் என்னுல் எத்தனை மாற்றங்கள் அதை விவரிக்க வார்த்தை போதவில்லை.


என் வாழ்வில் இன்னும் நான் சாதிக்க ஒரு அர்த்தம் கிடைத்த நாள்,

உன்னை நான் கருவில் சுமக்கவில்லை என்றாலும் உன்னை என் நெஜில் சுமக்க தயாரான நாள்,

தந்தை என்பது ஒரு உறவு மட்டுமில்லை அது ஒரு உணர்வு பாச பந்தம்.


உன் சிறிய கைகள் என்னை பற்றிக்கொண்ட தருணம் மனதில் சப்ப்தசுவரங்கள் ஒலிக்க தொடங்கின,

அழகிய கண்கள் என் முகத்தை பார்த்த முதல் நொடி அப்படியே என் கண்கள் படம் பிடித்தன,

தகப்பன் என்பது ஒரு உன்னத உறவு அதை உணர தொடங்கினேன் என் செல்ல குழந்தை பிறந்த நன்நாளில். 



Rate this content
Log in

Similar tamil poem from Drama