மனம்
மனம்
அறையினுள்: தூக்கம் இல்லா இரவு;
மனதின் ஏதோ பாரம்
இழந்தது எதுவென தேடுகிறேன்?
உடல் ஓசையின்றி
மனதின் ஆர்பரிக்கும் சப்தம் கொண்டு வெட்டவெளியில் வந்த அடுத்த நொடி
மெலிதாய், குளுமையாய்
என் முகத்தில் பாந்தமான தீண்டல்..
தென்றலின் தீண்டல்!
கட்டுப்பாடு ஏதுமின்றி
கண்ணிலிருந்த நீர்
கன்னத்தில் மையம் கொள்ளும் முன்,
யார் அது?
யோசிப்பதற்குள்
என் கைகளை ஈறுக பற்றி
மூச்சிரைக்க ஓடச் செய்தது
மேகக் கூட்டங்கள்....!
கனப்பொழுதில்
எண்ணங்கள் அற்ற மனம்
…..ஆழ் கடல் அமைதி!
ஸ்நேகம்
உற்ச்சாகம்
என் உதட்டோர புன்னகை
பொங்கிப் பெருகும் அன்பு ஊற்று-
இப்படி நிற்காமல் நிகழும் நிகழ்வுகளில்
இவளாள் மட்டும் என்றுமே
எளிதில் முடியும்:
“என் மனம்
மரித்து ஜனித்தது ஓசையின்றி”!
இவள் இயற்கை!