STORYMIRROR

Kanthi Meenakshi

Drama

4  

Kanthi Meenakshi

Drama

அம்மா

அம்மா

1 min
278

அம்மா

உன்னை எழுத மறந்தேனோ?

என் படைப்பின் முதல்

ரசிகை நீ!

என்னை மட்டும் அல்ல

என் படைப்பையும்

திருத்துபவள் நீ!

உன்னுடன் என் பயணம்

நினைக்க நினைக்க

மனதில்

மௌனமான ஆரவாரம்..

ஆரவாரத்தை மொழி வடிவில்

உனக்காக சிறு பிள்ளை மொழி!

அம்மா – தமிழை முழுவதுமாக

சேர்த்து, அனுபவ ஊற்றை கோர்த்து

உணர்வுகளை சொல் வடிவில்

எழுதினாலும்

எழுத்து, மொழியில் அடங்கா

உன்னத உறவு

ஜனனத்தின் முதல் உறவு

என்றுமே உன்

அரவனைப்பில்

உன் குட்டி இளவரசிகள்

நாங்கள்…

அன்பின் முகவரி நீ,

அறம் சொன்னவள் நீ

இயற்கையை உணர்த்தியவள் நீ

ஒழுக்கம் கற்பித்தவள் நீ

தமிழை சுவைக்க வைத்தவள் நீ

சுதந்திரக்காற்றை முழுவதாய் சுவாசிக்க வைத்தள் நீ

பயிலும் கல்வியை கடந்து

கற்பதற்கு பிரபஞ்சமே எல்லை

என்றவள் நீ

என் பிழை பொறுத்து

பொறுமை கற்பித்தாய்

மனிதர்களை படிப்பதின்

சுவாரஸ்சியத்தை உணர்த்தினாய்

புத்தக பயணத்தின் ருசி சுவைக்க

வைத்தவள் நீ

மதங்கள் கடந்த ஆன்மீக சுதந்திரம்

காட்டினாய்!

நாங்கள் வளர நீ

உருக்கினாய்

உன்னத அன்பு பெருக பெருக

கொடுத்து மகிழ்ந்தாய்

அன்பு கொடுப்பதில் மட்டுமே உள்ளது

பெருவது பற்றி என்றுமே

நீ சிந்திக்கவில்லை

நேரம் இருந்ததுமில்லை உனக்கு..

உன் அனைத்து

நற்பண்பு,

திறமை இன்றளவும்

அங்கீகாரம் அற்ற நிலையிலான

பயணம், என்றாலும்

உன் குட்டி

இளவரசிகளின் வளர்ப்பு

நிறைவான வளர்பு…

எங்களின் சிரிப்பே உன் மகிழ்ச்சி

எங்களின் வளர்ச்சி உன் வெற்றி

எங்களின் அடையாளம் நீ….

உன்னை எழுத்தில் அடைத்துவிட்டேன்

எழுத முடியா அனுபவம் ஆயிரம் கடக்கும் ….

அதை நீ எழுத நான் படிக்க ஆசை!

அம்மா நீ எங்களின்

ஆச்சர்யம்!

அன்றும் இன்றும் என்றும்!



Rate this content
Log in

Similar tamil poem from Drama