மீளுயர்வு காலம்
மீளுயர்வு காலம்


தேவைக்காக இல்லாமல்
ஆசைக்காக
அலட்சியமாக
வாழ்க்கை தடம்புரண்டதோ?
நிதர்சன உண்மை,
புரிந்தும் ஒப்புக் கொள்ள மனமில்லா
தலைமுறை!
மண்ணை மறந்த மைந்தர்கள்!
இயற்கை புறக்கணித்த செயற்கை வாழ்க்கை,
கணப்பொழுது மாற்றம் விரும்பும் இன்றைய தலைமுறை!
உடுப்பு: மானம் காக்க அல்ல
சமூக ஆடம்பர அடையாளமாய் மட்டுமே,
ஆரோக்கியம் மறந்த உணவு,
பண்பை மறந்த படிப்பு,
ஒழுக்கம் மற(றை)ந்த சூழல்,
அறம் தொலைந்த வாழ்க்கை,
முடியாட்சியாய் அறிவியல், தொழில் நுட்பம்..
படித்த முட்டாளாய், அடிமைகளாய் நாம்!
வழிநடத்த தவறிய மூத்த தலைமுறை:
பார்வையாளராய்,
மேடைபேச்சாளராய்
வார்த்தைகளை மென்னு அசைபோடும் கூட்டங்களாய்…
காரணம் ஆயிரம் பேசும் உலகமையமாக்கம் தொடங்கி
உள்ளூர் அரசியல் வரை.
எது நடந்த போதும்
நம் பாரம்பரிய சித்தாந்தங்களை
இறுக பிடிக்க தவறிய குற்றங்கள்
யாரின் பக்கம் திருப்பப்பட வேண்டிய வாதம்?
ஆம்! வாதம் எளிதுதான்.!
வாதிட
பழகிப்போன அற்புத
கலை கொண்ட இனம் நம் தமிழ் இனம்!
அதைவிடுத்து நம் தவறுதலை
உற்று நோக்க ஆயிரம் பக்கம் உண்டு
நாம் கடந்துவந்த பயணத்தில்,
அடித்தளம் - வழிநடத்தல் :
ஆம்! மாபெரும் கலை
பழமையை உணர்ந்து;
பாரம்பரிய சித்தாந்த தெளிவு;
புதியன புகுதலை ஆராய்ந்து;
தேவைகளை வகுத்து;
இன்றைய தலைமுறையை
வழிநடத்தியிருக்க வேண்டும்.!
காலம் கடந்த புரிதல் ஆயினும்
பரபரப்பு சூழலில்
மனநிறைவு: நித்தம் நித்தம் தேடல்!
சலிப்பில்லா நீண்ட நெடு பயணம்!
மாற்றம் எதிர்நோக்கி அமைதியாய்
இயற்கை தோழி-
மீளுயர்வு காலம் தொடங்கிற்று………..