Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Kanthi Meenakshi

Inspirational

4.5  

Kanthi Meenakshi

Inspirational

மே 20

மே 20

1 min
23.1K


அறுங்கோணத்தில் அந்தரத்தில் மிதக்கும்;


மழலையின் கன்னம் ஒத்த மிருதுவான பல புள்ளி வானம்;


பிரமிக்க வைக்கும்

பிரபஞ்சத்தின் முதல் பொறியாளர் கூட்டம்;


சமிஞ்கை திறனாளிகள்;


தட்ப வெப்ப வல்லுநர்கள்;


எண்ணிலடங்கா பிரம்மாண்டங்களை வழிநடத்தும்

பெண்களை மையம் கொண்ட சாம்ராஜியம்;


கூட்டுக் குடும்பத்துக்குள் தனிக்குடித்தனம் என்ற இனிமைக்குள் புகுந்து புரண்டு போதை கொண்ட உலகு

தேனீயின் உலகு-

தனித்துவமான உலகு…


தேனீக்கள் தினமாம்..(20மே)


பூமியின் ரகசிய 

இயக்குனர்


கடமைத் தவறா

உழைப்பாளி;

நீ தேடித் தேடி 

உணவு சேமிக்கிறாய்

உன்னை துரத்தி துரத்தி 

அதை கைப்பற்றி

உன் சேமிப்பே

உனக்கானதில்லை என்று மமதை  

கொள்ளும் 


-என் இனம்-பாவம்....



உங்களை பூமிப்பந்தில் இருந்து முழுவதும் துரத்திவிட்டால் அரை திங்களுக்கு மேல் என் இனத்திற்கு வாழ்க்கை சாத்தியமற்றது என்று தெரியாத கூட்டத்தில் நானும்..


இருந்தும் நீ உன் சேமிப்பை

நிறுத்துவதில்லை-


நீ இருப்பதால் மட்டுமே...

பக்கத்து வீட்டு பூந்தோட்டத்து சொந்தக்காரி எனக்கு சம்மந்தியானாள் 


ஆம்! 

அயல் மகரந்த சேர்க்கை உன்னால் சாத்தியமானதால்;


நீ இருப்பதால் மட்டுமே

மருத்துவ உலகம் சாத்தியமாயிற்று;

சில கசப்பு மருந்துகள் நாவை தாண்டி தொண்டையை கடந்து செல்கின்றது;


சில நேரங்களில் மருத்துவர்கள் கூட குழந்தைகள் விருப்பப் பட்டியலில் இடம் பெற உன் பங்கு மறுக்க முடியாதது 


உன் பெருமையை

உலகிற்கு எடுத்துச்

சொல்ல நீ யாரையும் தேடியதில்லை;


எது வந்த போதும் 

உன் துடி துடிப்பு குறைந்ததில்லை,

சோர்ந்ததில்லை

உன் பயணம் தோற்றதில்லை


- உன் போல் -


மலரை காதலிப்போர் 

இப்புவியில் இல்லை,

உன் ஆர்பரிக்கும் 

ரீங்காரம்  

உன் காதலின் 

அடையாளம்


ஒரு துளி தேனிற்கு 

பல மயில் தூரப்பிரயாணம் …


இயற்கையின் 

ஆச்சர்யம்தான் 

உன் ஜனனம்!

உன் போல்

பசுமை போராளி 

ஓருபோதும் ஜனிக்க முடியாது…!



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational