STORYMIRROR

Kanthi Meenakshi

Others

4  

Kanthi Meenakshi

Others

அம்மா வீடு

அம்மா வீடு

1 min
402


பிறந்த வீட்டிற்கு என்

பயணம்! புதியதோர் பயணம்!

3 தசாப்த்ததில் 

முதல் முறையாக…..!

ஆம்! விமானத்தில்!

இரவை பகல் விழுங்கும்

13 மணி நேர நிலம் வழி பேருந்து பயணத்தை 

1 மணிநேர காற்று வழி பயணம் விழுங்கியது! 

மேல் நின்று பார்ப்பவை 

மேன்மை தொட்டவையாய்….!

எங்கு நோக்கினும் 

செழிப்பான செம்மண்,

பனையின் கம்பீரம்,

பல நூறு காற்றாலையின்

ஓயா சுழற்ச்சி!

பச்சையாக போர்த்திய மரங்களின் 

அசைவு….

ஆங்காங்கே புலப்படும் 

சிறு சிறு குட்டை,

குளம்…

என் உள்ளிருந்து 

செம்மண் பூமியின் வாசம் தரும்

மண்ணோடு சேமித்த தண்ணீர்

அருகில் அல்ல தூரமாயினும்

எழில் கொஞ்சும் புன்னகை!

எது மாறிபோயினும் 

பெருமிதம் மட்டும் 

குறைந்தபாடில்லை: “எங்க ஊருலே!”

மனதின் ஆச்சர்யம்

அமைதி நிறைந்த விமானநிலையம்!

போக்குவரத்து நெரிசல் காணா 

சாலைகள்!

நானும் நடக்க துவங்கினேன் …

எவ்வளவு தூரம்?

அறிந்திடவில்லை

உடலோடு உறவாடும்

மண், மிகுதி வெப்பம்,

ஈரப்பதம் தேடும் காற்று…

என் கண்களில் உரசி  

என்

கண்ணீரில் குளுமை தேடியது!

நானும் ஆழமாய் என்னுள்

பயணித்த சிறு கீலோமீட்டர் 

அதுவே!

எல்லை வரை நடை பயணம்

பேருந்து கிட்டும் என்ற நம்பிக்கையில்..!

இல்லை இல்லை

காரில் தான் பயணம் …..!

முன்னுரிமையின்றி முடிவானது-

சென்னை – தூத்துக்குடி : ரூ 2916/-

தூத்துக்குடி- நெல்லை: ரூ 1100/-!

பணம்: அம்மா வீடு 

செல்லும் போது காகிதமாய் தெரிவது விந்தைதான் போலும்!

என் பிறந்தவீட்டில்

மட்டுமே நான் நானாகும் நேரம்-

மீண்டும்  

பிரவேசிக்கும் நொடி

எல்லையற்ற காற்றைப்போல் நானும்-

அந்த நேரம் சுவைக்க பயணப்பட்டேன்..

வாழ்வியலின் பயணம் 

முற்றுப்பேரா சுவாரஸ்யம்தான்!



Rate this content
Log in