மனைவி
மனைவி
பதினைந்து வயதில்
கைபிடித்தபோது
விளையாட பெண் என
நினைத்தேன்!
இருபது வயதில்
எனக்கொரு பேச்சுத்துணை
என நினைத்தேன்!
இருபத்தைந்துவயதில்
மகன் வந்தபோதுதான்
உணர்ந்தேன்
அவள் எனது வீட்டின்
குத்துவிளக்கு!
நாற்பதுவயதில்
அவள் ஒரு சுமைதாங்கியாக
உணர்ந்தேன்!
அறுபதுவயதில்தான்
என்னவள் தாய் என்றே
உணர்ந்தேன்!
பலமுகம் காட்டும்
இனிய குணத்தவளை
என்னென்று எடுத்துரைப்பேன்!