Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Abstract

4  

Tamizh muhil Prakasam

Abstract

மிதிவண்டி

மிதிவண்டி

1 min
22.5K


காற்றைக் கிழித்தே பறக்கிறாய் !

உந்தன் மீதமர்ந்தே நானும் -

காற்றில் மிதக்கிறேன் !

அகழ்வாரைத் தாங்கும்

நிலம் போல நீயுமே -

உன் மீதேறி நானுமே

காலால் மிதித்து உந்திட

எனை தூக்கிச் சுமந்தே

சிறகு விரித்த பறவையாய்

ஊரெலாம் சுற்றி வருகிறாய் !

உன்னைச் சுற்றியே தான்

பலருக்கும் உண்டு

பல பசுமை நிறைந்த நினைவுகளே !

உடல் நலம் காப்பதில்

சிறந்த முன்னோடியும் தான் நீயே !

எத்தனை சொகுசு வாகனம் வந்தாலும்

உந்தன் பெருமை என்றும் மங்காதே !

ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவரே

என்றும் உனை மறவாதிருப்பாரே !

நீடூழி நீயும் வாழ்வாயே !



Rate this content
Log in

Similar tamil poem from Abstract