குடும்பம்
குடும்பம்
தாத்தாவுக்கு தேவை ஒரு கொம்பு,
தடியூன்றி ஊரை சுற்றி வந்து விடுவார்
பாட்டிக்கு தேவை ஒரு பல் செட் ,
வெற்றிலை பொட்டி
அம்மாவுக்கு தேவை அடுக்களையில் சாமான்கள்
அப்பாவுக்கு தேவை
மிடுக்கான ஸ்கூட்டர்
அண்ணனுக்கு தேவை நண்பர்களுடன் கூடும் கூட்டம்
அக்காவுக்கு தேவை மாதர் சங்கம்
ஆனால் எனக்கோ இவர்கள் சேர்ந்த குடும்பம்.