STORYMIRROR

Rajasekar Rathakrishnan

Tragedy

4  

Rajasekar Rathakrishnan

Tragedy

கொரொனாவால்கொந்தளிக்கும் மக்கள்

கொரொனாவால்கொந்தளிக்கும் மக்கள்

1 min
23.4K


தற்போதைய நிகழ்காலத்தை எதிர்காலத்தில் இறந்தகாலம் என சொல்வார்கள், ஆனால் 

இந்த காலத்தை அப்பாவி மக்கள் கொரோனாவால் இறந்த காலம் என சொல்ல வைத்து விடாதே!

வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு, இன்று எல்லை தாண்டி யாரும் உள்ளே வர வேண்டாம் என சொல்லவைத்து விட்டாய். ஏன் இவ்வளவு கோபம்?


வெயில் காலத்தில் கண்ணுக்கு தெரிந்த சூரியன் சுட்டெரிக்கும் போது கூட சுற்றி திரிந்த நம் மக்கள், இப்போது கண்ணுக்கு தெரியாத நீ தொட்டு விடுவயோ என பயந்து வீட்டுக்குள் உள்ளடங்கி இருக்கின்றனர் இந்த ஊரடங்கில் !

இது நியாயமா?


உன்னால் இறப்பவர்களை விட , உனக்கு பயந்து ஒளிந்து வீட்டில் கிடந்து பட்டினியில் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி விட்டாய்!


உலகையே அச்சுறுத்தும் இயற்கை சீற்றம் கூட ஒரு சில இடங்களில் மட்டும் வந்தும் ஒரு சில நாட்களில் சென்றும் விடும், ஆனால் நீயோ உலகின் அனைத்து இடங்களிலும் சென்று அனைவரையும் சில மாதங்களுக்கு அவதிப்பட வைக்கிறாய்!



அப்துல்கலாம் கனவு, இந்தியா 2020 இல் உலகில் சிறந்த நாடக மாறும் என, ஆனால் உன்னால் இந்தியா, கொரோனாவால் பல நூறு மக்கள் இறந்த நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டது!!

போதுமா இல்லை இன்னும் வேண்டுமா!சென்று விடு கொரோனா சென்று விடு

உன்னை வென்றுவிட நாங்களும் துணிந்து விட்டோம்!!!


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy