காவியத் தாய் ஓவியம்
காவியத் தாய் ஓவியம்
காலை எழுந்ததும்
காலை வணக்கம்
காது குளிர சொல்ல
காசு கொட்டியதுபோல
கால் பிடித்து சிரித்தெழுப்ப
கால் பங்கு சம்பளம்
கால்சராயில் இருந்தாலும்
காசுக்காக சண்டையிடாமல்
காகத்திற்கும் சோறிட்டு அன்புமொழி
காட்டாற்று வெள்ளமென
காட்டி சுவரில் ஆடிய
காற்றில் மனைவி வரைந்த
காவியத் தாய் ஓவியம்!