STORYMIRROR

SHIVANI PRIYANGA

Romance Fantasy

4  

SHIVANI PRIYANGA

Romance Fantasy

இரவு கூறுமா???

இரவு கூறுமா???

1 min
334

ஒரு இளமாலை 

ஏதோ மயக்கத்தில் யாரோ...

உன்னை நோக்கிய என் பயணம்!

வாழ்வின் தேடல் நீயனால்...

தேடலின் புனிதம் என்னவோ???

மனம் மயக்கும் மது,,

முழு போதையில் மதி...

தள்ளாடிய பிறை கரையுமோ 

கரை சேருமோ!

கடலின் அலை அழைகின்றதே...

களவாடிய கால்கள் காணாமல் போகுமோ???

திசைகள்யாவும் நீயே...

நினைவுகள்யாவும் நிலையன்றோ...

உன் பாதம் எங்கோ 

அங்கே என் பாதை பார்க்கிறேன்!

ஏனோ அங்கு தோற்கிறேன்...

இந்த அந்தி நேர நிலவில் எத்தனை எண்ணங்கள் ,

எல்லாம் உன்னை நோக்கியே!

ஒரு தேநீரின் அனலில் 

அத்துணை இன்பம் எனக்கேனோ??

மழை சாரலாய் முன் ஞாபகங்கள்...

மண்ணில் அழிகிறதே!

இதயம் எனும் வனத்தில் 

வண்ணங்கள் வளர்கிறதே!

புன்சிரிப்பின் பின்னால் ரகசியம் பின்னுகிறதே!

அர்த்தம் என்று எதை நான் கொள்ள???

இரவுகள் கூறுமா??

இல்லை இது போல் மீண்டும் மலருமோ!!


Rate this content
Log in

Similar tamil poem from Romance