இலஞ்ச இயந்திரம்
இலஞ்ச இயந்திரம்
பொய் கையெழுத்தும்
பொய்யான வாக்குறுதிகளும்
இயந்திரப் பணியில்
வட்டமான கையூட்டு சக்கரத்தில்
பிணைக் கைதியான சோகத்தை
எப்படி எடுத்துரைப்பேன்?
பாடம் பயின்றோம்
பதவி வகித்தோம்
பண்பாளனாக வாழ்கிறோம்
படிப்பிற்கு தகுந்த
பணி செய்தோமா
என்றால் மனசாட்சி
நம்மை கணையால்
வதைத்தெடுக்கின்ற நாளை
எப்படி மறவேன் நண்பா!