💫இலக்கியம்💫
💫இலக்கியம்💫
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து
முன் தோன்றியது முத்தமிழ்
தமிழ் உலகிற்கு என்னை
தாரை வார்த்தது இலக்கியம்
இலக்கண, இலக்கியத்தை
அள்ளித் தந்தது தேன் தமிழ் இலக்கியம்
சங்ககாலம் முதல் தற்காலம் வரை
வரலாற்றை அறியத் தந்தது இலக்கியம்
நவரசங்கள் நயக்க
கற்றுத் தந்தது இலக்கியம்
ஐந்திலக்கண மரபையும்
அறம், பொருள், இன்பம், வீடு என்ற
அறப் பண்புகளையும் வளர்த்தது
தமிழ் இலக்கியம்
படிப்பறிவற்ற பாமர மக்களும்
இன்புற்று படிப்பது இலக்கியம்
கலைகள் அறுபத்து நான்கினையும்
வடிவமைப்பது இலக்கியம்
✨✨✨✨✨
