காரோண கல்வி
காரோண கல்வி


புதிய தினம், இன்று முதல் நாள் பள்ளிக்கூடத்தில்,
நண்பர்கள் ஆசிரியர்கள் என புதிய அறிமுகம் பல,
இன்று போல எல்ல நாளும் இருந்தால் மகிழ்ச்சி நிரம்பு வாழ்வில்.
நாட்கள் பல ஓடின, எட்டு மாதங்கள் ஆகின,
சற்றும் எதிர் பாராமல் வந்தது அறிவுப்பு பள்ளிகள் மூடபடும்
அனைத்து வகுப்பும் கணினி வகுப்பாக மாற்றப்பட்டது.
பயிலிலும் வகுப்போ மழயலையார் முதல் வருட படிப்பு,
கணினி வகுப்பு இதில் எவ்வாறு பயிலுவது என ஒன்றும் புரியவில்லை,
பள்ளி இல்லை, வகுப்பறை இல்லை ஆனாலும் பாடம் பயிலவேண்டும்.
கையில் எழுது கோல் பிடித்து நண்பர்களுடன் எழுதி பயில,
வாய்ப்பில்ல்லாமல் போனது, சிறு வயது குறும்முபுதனம் செய்ய முடியாமல் போனது,
ஆர்வமாக பயில எண்ணி கடைசியில் ஒலி தடை மற்றும் விளக்கு இரண்டையும் கற்றுத்தேர்த்தனர்.
ஓடியாடி விளையாடி பயில்வது எவ்வாறு இருக்கும் என்ன
அறிய வளர்ந்தனர்,
இரண்டு வருடங்களில் அவர்கள் அறிந்தது கணினியை மட்டுமே,
விளையாட்டு மைதானம் இல்லை, வகுப்பறை இல்லை காலம் ஓடியது.
மீண்டும் பள்ளிகள் திறக்க மழயலையர் முகத்தில் ஒரு ஆச்சரியம்,
என்ன நான் நிறைய படிக்கணும் ஆனால் மழயலை பருவ விளையாட்டை,
இன்னும் முடிக்கவில்லை அதற்குள் செய்யவேண்டியவை நிறைய இருக்கு.
என்னதான் அறிவியல் காலத்தின் மாற்றம் என கூறி இப்படி செய்த்தாலும்,
அந்த அன்பு குழந்தைகள் தவற விட்டது பல மகிழ்ச்சி தருணங்களை,
மீண்டும் இந்த காரோண கால மழயச் செல்வங்களுக்கு கிடைக்குமா
நாம் அனைவரும் படித்த மகிழ்ச்சியான விளையாட்டு நிறைந்த பள்ளி கலாம்?
இனி கணினி கல்வி இருந்தாலும் இந்த பிள்ளைகள் பெறாமல் இருப்பது
நாம் பெற்ற வகுப்பறை கல்வி மற்றும் மனதில் நீங்காமல் இருக்கும்
அந்த அழகிய மழயலையார் பருவ கல்வி.