அவள்🖤!
அவள்🖤!


தன் வழிகளில் கண்ட வலிகளினால்,
வலிமை கொண்டாள் அவள்,
தன் கனவுகள் கொடுத்த காயங்களினால் கலங்கவில்லை அவள்,
தன் புன்சிரிப்பால் புறக்கணிப்புகளை புறக்கணித்தாள் அவள்,
தன் மன ரணங்களின் கனத்தினை
மல்லிகை முகத்தினுள் மறைத்தாள் அவள்,
பிறர் வாழ்வில் வண்ணங்கள் விதைத்தே வாழ்ந்தாள் அவள்🖤!