என் தந்தை
என் தந்தை


சிறு வயதில் நடை பயில சொல்லித் தந்தவரே
குழந்தைப் பருவத்தில் ஊன்றுகோலாக இருந்தவரே
என்னை தோளில் சுமந்து உலகை சுற்றிக் காட்டிவரே
எனக்கு நல்ல வழக்கங்களை சொல்லி தந்தவரே
எனக்கு விளையாட்டு பொம்மைகளை வாங்கி தந்தவரே
எனக்கு இணையாக விளையாடுபவரே
எனக்கு கால்பந்து விளையாட்டு சொல்லி தந்தவரே
அன்பிற்க்கு அடையாளமாய் திகழ்பவரே
இரவில் புதுபுது கதைகள் சொல்பவரே
என்னுள் இருக்கும் எழுதும் திறமையை உணர்த்தியவரே
எனக்கு உயிர் நண்பணாய் திகழ்பவரே
என் வாழ்க்கையின் அங்கமாய் வசிப்பவரே
உன் பாசத்திற்கு இணை ஏது
நம் குடும்பத்திற்காக உழைப்பவரே
எனக்கு ஆசானாய் விளங்குபவரே
எனக்கு கடவுள் தந்த வரம் நீ
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்