கோபம்
கோபம்
ராமுவும் சோமுவும் தந்தை-மகன். மகன் ராமு மிகவும் கோபக்காரன். அவன் கோபத்தை எப்படி குறைப்பது என்று யோசித்தார். ஒருநாள் சோமுவும் சில பணிகளை கொடுத்து இதை உனக்கு கோபம் வரும்போதெல்லாம் அங்கு உள்ள ஒரு. மரபலகையில்
அடிக்கச் சொன்னார். ராமுவும் அவனுக்கு கோபம் வரும்போதெல்லாம் அந்த ஆணியை.மரபலகையில் அடிப்பான். முதல் நாள் 14 ஆணிகளை அடித்தான் இரண்டாம் நாள் 10 ஆணிகளை அடித்தான். மூன்றாம் நாள் சோமு கேட்டார். இப்போது உன் கோபம் எவ்வாறு இருக்கிறது. அப்பா குறைந்துகொண்டே வருகிறது என்று சொன்னான். சரி மகனே இப்போது நீ அடித்த ஆணிகளை பிடுங்கி எறிந்து விடு என்று சோமு கூறினார். அவனும் பிடுங்கி எறிந்தான். ஆனால் ஆணி பிடுங்கிய இடத்தில் ஆழமாக குழி இருந்தது. சோமு ராமுவிடம் கேட்டார். இந்தக் குழி அகற்ற முடியுமா. எனவே கோபப்படாமல் இருப்பது சாலச் சிறந்தது என்றார். அப்போது தான் ராமு விற்கு தன் கோபத்தின் அடையாளங்கள் புரிந்தது. இனி கோபப்படக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.