என்னவனே
என்னவனே
எங்கு சென்று கற்றாயோ ?
இந்த புன்னகை வித்தையை
தடுமாறி நிற்கிறேன்; தடம் மாறி போகிறேன்;
நீ புன்னகைக்கையில்- உன்
கண்ணக்குழி அழகினை கண்டு
திகைத்து ரசித்து நின்றது உண்டு:
உன் புன்னகையால் மட்டும் தான் உள்ளம் பறிப்போனது என்று நினைத்தேன்
ஆனால்
கதைகள் பல பேசுவது உன் கண்ணல்லவா
வார்த்தையின்றி மனதை திருடும் கலையில் வல்லவன் நீ என்பதை எவ்வாறு மறந்தேனோ!!!!!

