என் அம்மா !!!
என் அம்மா !!!
நண்பன் சொன்னான்
எதை பற்றி கேட்டாலும்
பதில் சொல்லும் "google" என்று.
அவனுக்கு தெரியாது போலும்
கூகிள் -கும் தெரியாதது சில உண்டு என
அப்பாவின் கடிகாரம்
பாட்டியின் வாரநாளிதழ்
தாத்தாவின் கண்ணாடி
என்னுடைய காலணிகள்
அன்றும் இன்றும் என்றும்
எனக்கு கூகுளை விட பெரியவள்
என் அம்மா !!!