சுதந்திரம்
சுதந்திரம்
சுதந்திரம் என்பது என்ன என்று தெரியாமல்,
கொண்டாடி கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு வருடமும்,
சுதந்திர தினத்தை,
இன்றும் பல வெளிநாட்டு நிறுவனங்களில் அடிமையாகி வேலை செய்து கொண்டிருக்கிறோம், நாம் உரிமைகளை மறந்து,
அதையே தான் பெறுமையாக கருதுகிறோம் பகட்டுக்காக,
ஆனால் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பற்றி அறிந்து கொள்ளவோ,
அதை செய்வதற்கோ யாரும் முயற்சிப்பதில்லை,
நமக்கு பசியாற உணவிடுபவர்களையோ,
அல்லது விவசாயத்தையோ நாம் மதிப்பதே இல்லை,
என்று நாம் நம்முடைய உரிமைகளை அறிந்து,
அதற்காக வாழ முற்படுகிறோமோ
அப்பொழுது தான் நமக்கு உண்மையான சுதந்திர தினம்....
அது வரை இது பெயரளவில் மட்டுமே சுதந்திரமாக இருக்கும்...
இனியாவது நாம் நம் உரிமைகளை அறிந்து, கடமைகளை செய்து சுதந்திரமாக வாழ்வோம்......
