சுற்றுப்புறச் சூழல்
சுற்றுப்புறச் சூழல்
வரிசையாக மரங்கள்
சோககீதம் இலைகளை
உதிர்த்தபடி நின்றிருக்க
இருவாட்சி மரம்
மட்டும் மூக்கைப்
பொத்தியபடி செல்!
என்றே பூனைக்கு
உத்தரவிட அருகே
நின்றிருந்த நெகிழி
குப்பைகள் சுவரினை
ஈரமாக்கியபடி நின்றிருந்த
இரண்டுகால் நாயினை அடிக்க
காற்றிடம் தூது செல்ல
அருகில் இருந்த
அடுக்ககத்திலிருந்து முதல்மரியாதை
வடிவுக்கரசியின் பாட்டை
உச்சஸ்தாயியில் காற்று அலறவிட
பூனை கீழே நிறைந்து கிடந்த
சிகரெட் மலைகள்
எப்போது கழியுமோ!
என்ற ஏக்கத்தில்
மெல்லமாக மியாவ்
என்றபடி பூமியில்
தண்ணீருக்காக
வாலை ஆட்டி தேடிய
புற்றுநோய் நான்குகால் நாயின்
சோகத்தை பார்த்தபடி
அருகில் இருந்த
செல்ஃபோன் டவர்
கூற்றுவன் சிரிப்பை
மாலையாக்கி குருவிகளின்
இறுதி யாத்திரையில்
கலந்துகொள்ள சாதி மதம்
பாராமல் நம்மாழ்வார் படத்துடன் சென்றது!