அவன் காதல் வேண்டும்
அவன் காதல் வேண்டும்
என்னிடமிருந்து அவனுக்கானக் காதல் வேண்டும் என்றான்
நான் அது என்னால் இயலாத ஒன்று என்றேன்
ஏன் இந்த மாறுபாடுக் கண்மணியே என்றான்
அது காயங்கள் தரகூடுமடா என்றேன்
அவன் தள்ளிச் சென்றான் பல மைல் தூரங்கள்
எனக்கான பதிலோடு
என் இதய ராணியே ! ! !
இன்பங்கள் மட்டுமே எதிர்பார்த்து வாழ்வது இயற்கைக்குப் புறம்பானதடி என்று
காயங்களுக்கு அச்சப்பட்டு தவிர்த்த நானே இப்பொழுது
காயங்களுடன் பரிதவிக்கிறேன் அவனுக்காக...

