STORYMIRROR

VARADHARAJAN K

Abstract

4  

VARADHARAJAN K

Abstract

ஆசிரியர்

ஆசிரியர்

1 min
411

உடலை உருக்கி...

ஆற்றலைப் பெருக்கி..

அறிவென்னும் மந்திரத்தை...

அன்பெனும் தந்திரத்தால்...

குரலெனும் ஆயுதம் கொண்டு...

குன்றாது நாளும் போதித்து...

அறியா கற்களை...

அழகிய சிற்பமாய் நாளும் வடித்து....

அகிலத்தை அழகு பார்க்கும் சிற்பிகளே!

அன்பு கூறுவதில் அன்னையாய்...

நல் வழிகாட்டுதலில் தந்தையாய்...

உடல்நலம் பேணுவதில் மருத்துவனாய்....

ஊக்கம் அளிப்பதில் உன்னத ஆசிரியனாய்...

மகிழ்ச்சியைத் தருவதில் உற்ற நண்பனாய்....

ஆறுதலை வழங்குவதிலே அன்பு சகோதரனாய்...

அள்ளிக் கொடுப்பதிலே வள்ளலாய் ...

கைம்மாறு கருதாத மாரியாய்...

அறியாமை இருள் நீக்கும் ஆதவனாய்...

கண்கண்ட தெய்வமாய்....

அவனியின் தரம் உயர்த்த பாடுபடும் ஆசான்களே!

உம் அறிவாகிய ஒளி இப்புவியின் மீது தொடர்ந்து வீசிக் கொண்டே இருக்கட்டும்!

வாழ்க உம் குலம்! 

வளர்க உம் நலம்!

தொடர்க உம் பணி!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract