வழக்கு
வழக்கு
மதுரை மாவட்டம் ராஜா மில் ரோடு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் உறவினர் வீட்டில் நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது, விருந்திற்காக படைக்கப்பட்ட கறிசோற்றை அவர் அளவுக்கு அதிகமாக உண்டதாக கூறப்படுகிறது. இதனால், உடல் நிலை பாதிக்கப்பட்ட கண்ணன் திடீரென மயங்கி விழுந்தார்.
பின்னர், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்த, புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
