Binth Fauzar

Classics Inspirational Thriller

3  

Binth Fauzar

Classics Inspirational Thriller

வெற்றுத்தாள்கள்

வெற்றுத்தாள்கள்

2 mins
143



————————————என்ன வாப்பா...இந்த காலையோடே எழும்பிட்டு..?ஆ,..இன்னகி அந்துருநீதிய எடுத்தீக்கிறாங்க.அதோட திரும்ப ஒன்றரை மணிக்கு போட்டுடுவாங்க.

ஓ..எனா வாப்பா. மறந்துட்டன்.நா லொக் டவுன் மூட்ல கேட்டேன்.பொய்டு சாமான்வல வாங்கிட்டு டய்முக்குள்ள வந்து சேந்துடுங்க.

வீட்ல உப்ப தவிர எல்லா சாமனும் தீர்ந்து போச்சு.கைல இருக்குற சல்லிக்கு கடைல சாமான் இருக்குமோ தெரியல.

ஹ்ம்....ஏதோ இருக்கறத வச்சு வாங்கிட்டு வாரன்.வச்சு சமாளிச்சுக்குவம்.

பணத்த விட பெரிய செல்வம் குழந்தைகள்.பெரிய பங்களாக்கு வாரிசு இல்லாம எத்துன பேர் அழுதுட்டீக்றாங்க.நிச்சயம் அல்லாஹ் நம்மை குழந்தைகள் எவ்வளவு பெரிய அருள் எனுபதை உணர்த்துவான்.இன் ஷா அல்லாஹ்.

அது சரி.இன் ஷா அல்லாஹ்.

மனைவி ஷிஹாராவின் சிறு நற்சிந்தனை கேட்டு,நாம எல்லாம் லிஸ்ட் போட்டு சாமான் வாங்குற காலம் எப்ப வருமோ....?? என்று அவர் எண்ணியிருக்க வேண்டும்.

"வாப்பா இந்தாங்க மாஸ்க்."

மகள் ஷமா மாஸ்க்கை நீட்ட உணர்வுக்கு வந்தவராய்...,

மனதால் வருந்திக்கொண்டே கடைக்குப் புறப்பட்டார் பரூஸ் நாநா.


"ஆ ஷரீப் தம்பி...என்ன கத...?"

"இதுவரக்கிம் இருக்குறோம் அல்ஹம்துலில்லாஹ்.கத இனி...,கொரோனா நம்மல விட்டு போற போல இல்ல எனா..?"

"புள்ளகுட்டிகள்ட படிப்புக்கும் அட்ரஸ் இல்லாம போயிடும் போல..."ஷரீப் தம்பியின் கதைக்கு சிரித்துக்கொண்டே தொடர்ந்தார் பரூஸ் நானா.

"அல்லாஹ்...,நல்ல வேல நீங்க அப்படி சொல்லவும் தான் மகள் நெட் கார்ட் கொண்டு வர சொன்னது நெனவுக்கே வந்துச்சு....""இப்போ லொக்டவுன் என்டு ஸ்கூல மூடினாலும் பாடங்கள் எல்லாம் நடக்குது எனா..."

"பாடமா எங்க நடக்குது?புள்ளங்க எல்லாம் வீட்டுல தானே இருக்காங்க...?"

"ம்..., ஒன்லைன்லதான் எல்லாம்.இப்போதானே ஸூம்,வட்ஸ் அப் எல்லாம் போன்ல இருக்கே.இருந்தாலும் எங்கட மகள் போன் ஸ்க்ரீன் சிறிசு என்டு லெப்ல தான் படிக்குறா.

குறைந்தது ஒரு ஸ்மார்ட் தொலைபேசியாவது தனது மகள் ஷமாவிற்கு இல்லையே என்ற ஏக்கம் பரூஸ் நானாவிற்கு வார்த்தைகள் வரவிடாது செய்தது.

"இருந்தாலும் கார்ட் வாங்க மட்டும் இலட்சங்கள் தேவப்படும் போல..."

ஷரீப் தம்பியின் சிறிய நகைச்சுவை ஏழை பரூஸ் நானாவிற்கு நகைப்பு வரச்செய்யாவிட்டாலும் தன்னை ஒருவாராக சுதாகரித்துக்கொண்டு,

"ஓஹ் அது சரிதான்..."சிறு புன்னகையால் உளரலைத் தடுத்துதிர்த்து வலுப்படுத்தினார் அவர் கருத்தை.

"இப்பவே நேரம் பதினொன்றாவிட்டு.டைம் போனதும் விளங்கல்ல.இன்னும் அரவர்தான் இருக்கு....""முதலாளி..,எல்லா சாமான்வலயும் மிஸ்ஸாவாம போட்டுட்டீங்களா?"

"ஓம்..இந்தாங்க...எல்லாம் சரி,பெலன்ஸ் உம் உள்ள இருக்கு."

"அப்போ பொய்ட்டு வாரன்.."

"ஆ..அல்லாட காவல்..."

விடை பெற்றார் ஷரீப் தம்பி.

தனது கையிலுள்ள சொற்ப பணத்திற்கு சிற்சில பொருட்களைக் கொள்வனவு செய்துவிட்டு வீட்டை அடைந்தார் பரூஸ் நானா.

ஷமா....ஷமா...,

"சொல்லுங்க வாப்பா?"

"மக...ள்,ஓ வயசுக்கு, நா ஒரு வாப்பாவா உனக்கு செய்ய வேண்டிய சில விடயங்கள செய்ய முடியாம போனத நெனச்சா என்னால தாங்க முடியல...,"

"என்ன வாப்பா சொல்ல வாரீங்க...?எனக்கு என்ன கொற வச்சீங்க?அப்படி எதுவும் இது வர நா உணர்ந்ததில்லயே...?"

"இல்ல மகள்..., ஹூமைசரா ட வாப்பா கடப்பக்கமா வந்திருந்தாரு.ஏ.எல் பாடமெல்லாம் என்னவோ வட்ஸப்பு, சும் இல எல்லாம் நடக்குதாம்.அவர்ட மகள் போன்லயும்,லெப்புலயும் படிக்குறாவாம்..."

இந்த செய்தி ஷமாவை உலுக்காமலுமில்லை.இருந்தாலும்,

"அல்லாஹ் வாப்பா..., "

"ஷமா...,அந்த மாதரி நல்ல பெரிய போனுமில்ல,லெப்புமில்ல எங்களுக்கிட்ட.இன்னும் ரெண்டு மாசத்துல சோதின வருதே....,நீ படிக்குற புள்ளயேமா...."

"என்ன நடந்த...?"இடையில் வந்தாள் மனைவி ஷியாரா.

விடயத்தை விளக்கிய பரூஸ் நானா,"ஹ்ம்...,கரண்ட் பில்,தண்ணி பில் எல்லாமே மொத்தமா இரண்டு மாசத்துக்கு சேர்த்து வந்திருக்கு.எனக்கு..."

வாப்பா ஒன்லைன் இல்ல,எனக்கிட்ட நோட்ஸ் கொஞ்சம் இருக்கு.கவலப்படாதீங்க.போன் இருந்தா தான் படிப்பு வரும் என்டு இல்ல.எல்லாமே முன்னரே இருந்ததுவல்ல இருந்து கிடைக்குறதில்ல.இல்லாததுல இருந்தும் தர்ரதுக்கு அல்லாஹ் சக்தியுள்ளவன்.ஆர்வமும்,இறை நம்பிக்கையும்,விடாமுயற்சியும் இருந்தா போதும்.

தன் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தன் பெற்றோர் கவலைப்படக்கூடாதென்பதற்காகவே கவனமாய் உதிர்த்தாள்.அவளது ஒவ்வொரு சொற்களிலும் இறை நம்பிக்கை இனிமையாகக் கோர்க்கப்பட்டிருந்தது.


"பெற்றோர்ட கஷ்டங்கள உணராம,அவங்கள நோவின செய்து,வீண் சாக்குப்போக்கு சொல்லிபெற்றோர்களோட காச வீண் விரயம் செய்தும்,அரட்டை அடித்தும் பொழுத கழிக்குற எத்தனையோ இளம் வயது புள்ளங்களுக்கு மத்தியிலஎன்ட மகள் ஷமா என்டா உண்மையாகவே பணத்த விட பெரிய அருள்தான்.."

"அல்ஹம்துலில்லாஹ்" பெற்றவர் இருவரது இதழ்களும் இதயத்தால் ஒரு சேர உரைத்தன.

ஷிஹாரா கேட்ட துஆ ஏற்கப்பட்டதற்கான அறிகுறியை உளப்பூர்வமாக உணர்ந்தார் பரூஸ் நானா.

நேரம் இரண்டு.அங்கு,ஷரீப் நானாவின் மகள்,ஒன்லைன் வகுப்புக்கு நோட் கொப்பிகளுடன் தயாராக,

ஒன்லைனில் படிக்க வேண்டிய ஷமாவின் நோட் கொப்பித்தாள்களோ வறுமையால் வெறுமையாகவே இருந்தன.இருந்தாலும் பல்கலைக்கழகம் சென்று சமூகத்தில் உயர வேண்டும் என்ற தனது பெற்றோரின் கனவை நனவாக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் குறையவில்லை அவளுக்கு.

பெற்றோரின் திருப்தியைப் பெற்ற மகிழ்ச்சியில் தன் கவலையை ஒருபுறம் போட்டுவிட்டு,

சஜ்தாவில் சங்கமமாகினாள்.....,

ஆம்,தன் ஏ.எல் விடைத்தாள்களும் வெற்றுத்தாள்களாக ஆகி விடக்கூடாதென்பதற்காக.

✍️Binth Fauzar



Rate this content
Log in

Similar tamil story from Classics