Read a tale of endurance, will & a daring fight against Covid. Click here for "The Stalwarts" by Soni Shalini.
Read a tale of endurance, will & a daring fight against Covid. Click here for "The Stalwarts" by Soni Shalini.

Binth Fauzar

Classics Inspirational Others

5  

Binth Fauzar

Classics Inspirational Others

மூன்றாம் பாலினம்

மூன்றாம் பாலினம்

3 mins
495மூன்றாம் பாலினம் என்பது இறைவனின் படைப்பில் இல்லை.எனின்,


இன்றைய நாட்களில் இந்தத் தலைப்பு அதுவும் இலங்கைக்குள் பொருத்தமானதா? என்று பார்த்தால் நமது வாழ்விடம் இதுவாயினும் உலகையே ஒரு திரைக்குள் கண்காணிக்கும் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதை மறக்கக்கூடாது.ஆக, சில செய்திகளின் உள்ளடக்கங்கள் பல மனிதர்களை மாற்றிவிடும் சக்திவாய்ந்தது.


ஒருவரை இறைவன் ஆணாக அல்லது பெண்ணாக நாடும் போது அவர்களுக்கு வெளியிலும் சரி மனோநிலை ரீதியிலும் சரி ஆணுக்கு ஆணுக்குரிய ,பெண்ணுக்கு பெண்ணுக்கு உரிய இயல்பிலேயே படைக்கின்றான்.


எனின் ஒருவர் விளையாட்டுக்காகத் தன்னை மாற்றிக்கொள்வாரா? எப்போதுமே அப்படி நடைபெற முடியாது.


ஒரு மனிதன் ஒரு பாலினத்துக்குள் இருந்துகொண்டு அன்றாட வாழ்வில் எவ்வளோ சவால்களுக்கு முகங்கொடுத்து வாழும் போது அவனது குண இயல்புகளில் ஏற்படும் மாற்றங்களையே ஏற்றுக்கொள்ள முனையாத சமூகத்தில் வாழ்கிறோம்.


அப்படி இருக்க தனது பால் நிலையை மாற்றுவதனூடாக சமூகத்தில் அவர்களுக்கான பார்வையும் வரவேற்பும் எங்கணம் இருக்கப் போகின்றதென்பதை அவர்கள் அறியாமல் இல்லை.


அதனையும் தாண்டி அவர்கள் இதற்கு முனைவதாயின் நிச்சயமாக ஒரு பின்னணி இருக்கும்.மூன்றாம் பாலினம் என்று இல்லாத ஒன்றை இந்த சமூகத்தில் உருவாக்கி இறைவனை மறந்து அதற்குள் நுழைபவர்களின் பின்னணி சூழலைப் பார்க்கும் போது அவர்கள் படித்திருப்பினும் பெரும்பாலும் பெரியளவு கல்வி நிறைந்த சமூக சூழலில் வளர்ந்திருக்க மாட்டார்கள்.தனக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்காத போது அதிலிருந்து மீள்வதற்கான மனப்பக்குவமும் மன தைரியமும் அவர்களிடம் இருந்திருக்கமாட்டாது.

அப்படி இருந்திருப்பின் அதனை வெற்றிகரமாக முகங்கொடுத்திருப்பார்களே தவிர இப்படி ஒரு முடிவை அவர்கள் எட்டியிருக்கப்போவதில்லை.இவர்களது சிறுவயது மற்றும் இளம்பிராயத்தை நோக்கும் போது ஆணாயின் பெண்கள் அதிகமாக உள்ள சூழலிலும் ஒரு பெண்ணாயின் ஆண்கள் அதிகமாக உள்ள சூழலிலும் வளர வேண்டிய நிர்ப்பந்தமான சூழல் ஏற்பட்டிருக்கலாம்.


இதனை விளங்க பெரியளவு பயணிக்க வேண்டிய தேவை கிடையாது.சாதாரணமாக சொல்வதாயின் ஒரு வீட்டில் மூன்று ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் இருக்கும் போது ஆண் பிள்ளைகள் சார்ந்த சில குண இயல்புகள் அந்தப் பெண் பிள்ளையிடம் இருப்பதை சில இடங்களில் அவதானிக்கின்றோம்.அதற்காக அந்தப் பெண் பிள்ளையை ஆணாகவே மாற்றிவிடுவது தீர்வாகப் போவதில்லை அல்லவா?அதே போன்ற காரணி தான் இதுவும்.


இவ்வாறு இருக்கின்றவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கப் போதுமான அளவு உளநல ஆலோசகர்கள் நம்மை சூழ அதிகமாகவே உள்ளார்கள்.ஆணோ,பெண்ணோ தமது சிறு பிராயத்தில் பாலியல் ரீதியான அதீத வன்முறைக்குட்படுத்தப்பட்டவராக இருக்கும் போதும் இப்படியான தவறுக்குள் சென்ற பலர் இருக்கின்றனர்.


ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தைகளுக்கு இது தொடர்பில் தைரியமாக வெளிப்படுத்தும் பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறான மன உளைச்சலுக்குட்பட்ட பின்னர் கவலைப்படுவதனை விட கண்போல் அவர்களைப் பாதுகாத்துக்கொள்தலே நலமாகிறது.


ஆக,அடிப்படையில் இருந்தே பெற்றோரும் இது தொடர்பில் கரிசனை செலுத்தி வருவது அவசியம்.


இல்லை என்றால் சமூகம் கூறுவது போல தனக்கு ஆணுக்குரிய சில இயல்புகள் இருப்பதாகத் தோன்றுகின்ற காரணத்தால் ஆணாக மாற சிகிச்சை செய்தாக வேண்டுமே எனவும் பெண்ணுக்குரிய சில இயல்புகள் இருப்பதாகத் தோன்றுவதால் பெண்ணாக சிகிச்சை செய்துகொள்ள வேண்டுமே எனவும் இதனைத் தவிர வேறு தீர்வுமுறையே இல்லை என அவர்கள் நம்பிவிடுவார்கள்.இதன் விளைவுகள் மிகப் பாரதூமானவை.

ஒரு ஆண் பெண்ணாக மாறும் போது இயல்பிலேயே உள்ள ஒரு ஆணையோ அல்லது பெண்ணாக இருந்து மாறிய ஆணையோ திருமணம் செய்கிறார்.அதாவது ஒரு ஆணும் இன்னோர் ஆணுமே திருமணம் செய்வதாக அமைகின்றது.

இங்கு இறைவனின் அடிப்படை ஏவலான ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தல் என்ற வரம்பு மீறப்படுகின்றது.
மிகவும் கவலையான விடயம் என்னவெனில் இப்படியான எண்ணப்பாடுகளில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி தவறான முடிவுகளை நோக்கிச் செல்லாதிருக்க நெறிப்படுத்தும் செயன்முறைகளை விடுத்து இவர்களை ஊக்குவிப்பதானது மன அழுத்தம் நிறைந்ததும் சவால்களை தனது பால் நிலையில் நின்றே முறியடிக்கும் தைரியமற்ற சமூகத்தை உருவாக்க உறுதுணையாகின்றதென்பதே.


அனைத்துக்கும் மேலாக சினிமா,சமூக வளைதளங்களின் பாரிய தாக்கங்களின் விளைவுகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.இறைவனின் சாபத்திற்கு வழிகோலும் இவ்வாறான பாவ காரியங்களை விட்டும் விலக வேண்டிய இச் சமூகத்தில் அண்மைக் காலமாக இதனை ஊக்குவிக்கும் ஊடகங்களும் எழுத்துத் துறையும் இவர்களைக் கொண்டாடுவது ஆச்சரியமாக உள்ளது.


எமது வாழ்வின் இலக்கை மறக்கடிக்கச் செய்து தேவையற்ற பிரச்சினைகளை எமக்குள் ஏற்றிக்கொள்ளக்கூடாது.எமக்குத் தலைவலி ஏற்பட்டால் உரிய வைத்தியரை அணுகாமல் ஊருலக வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய தலையணையை மாற்றுவது போன்றது தான் இந்தப் பிரச்சினையும் என்பதை சரியாகப் புரிந்தால் எமது வாழ்க்கையின் வடுக்களில் இருந்து வெளியேற முடியும்.இயற்கைக்கு முரணான இவ்வாறான முயற்சியில் எமது சமூகம் இணைந்துள்ளமையை நினைக்கும் போது மிக்க வேதனையளிக்கின்றது ஒரு தவறை பெரும்பான்மையானவர்கள் செய்துவிடும் போது நல்ல விடயமாக சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க நாம் பாடுபடுவது பெருமையல்லவே.அவரவர் உரிமை என்று இயற்கைக்கு முரணாக நடத்தல் எங்கணமும் ஏற்க முடியாது.ஐயறிவு மிருகங்களிடம் இல்லாத பகுத்தறிவு மனித இனத்திற்கு வழங்கப்பட்டது நாம் நினைத்தபடி வாழவல்ல.சிந்தித்து செயலாற்றுவதற்கே.அதிலும் அதிசயம் என்னவோ ஐயறிவு மிருகங்கள் கூட இறைவனின் விதியை மீறி இப்படி செயற்படுவதில்லை என்னும் போது மனிதர்களை நினைத்து வருத்தமாக உள்ளது.


இறைவன் தந்த உருவத்தை இவ்வாறு மாற்றுவது பாவமான செயல் என்பதை நாம் நினைவிற்கொள்தல் அவசியமாகிறது.ஒரு சலனம் போதும் உள்ளம் மாறிவிடுவதற்கு.ஊடகப் பயன்பாடு,சமூகவளைதளங்களின் பரவலான ஊடுறுவல் மற்றும் திரை உலகம் என்பவற்றில் வலம் வந்துகொண்டிருக்கும் எமது இளைஞர் யுவதிகள் மிக மிக நுணுக்கமாகவும் கவனமாகவும் செயற்படுதல் அவசியமாகும்.


சமூகம் ஏதோ ஒரு விதத்தில் இவர்களை வித்தியாசமாகப் பார்ப்பது இயல்புதான்.அது நியாயமும் கூட,இவர்கள் இறைவனின் விதியை வித்தியாசமாகப் பார்த்தது போல.எவ்வளவு எடுத்துரைப்பினும் ஆண் பெண்ணுக்கு நிகரான சமத்துவத்தை இவர்கள் எதிர்பார்க்க முடியாது.ஆணோ பெண்ணோ தான் தானாக இருப்பதுவே இறைவனின் கட்டளை.அதனை மீற எமக்கு எந்த சந்தர்ப்பத்திலும் முடியாது.ஏனென்றால் இந்த உலகிற்கு வந்த பிறகு நான் நினைப்பதைத்தான் செய்வேன் என்று வாழும் ஒருவர், தனது பிறப்பைத் தீர்மானித்தது இறைவன்,அப்போது இல்லாத உரிமை இப்போதும் இனி எப்போதும் எமக்கு இல்லவே இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.இறைவனின் கட்டளைக்கு முரண்பட்ட பல சமூகங்களின் முடிவு அழிவாகவே இருந்தது.இறைவனின் விதியை ஏற்றுக்கொள்வதில் தான் வாழ்க்கை இருக்கின்றது.அவனுக்கு மாற்றமாக நடப்பது இறைவனது கோபத்தையே அதிகரிக்கும். நிச்சயமாக நமது இறுதி மீள்தல் இறைவனிடமே இருக்கின்றது.எமது அங்கங்களில் எவ்விதக் குறைகளுமின்றிப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் நல்லடியார்களாக எம்மை ஆக்கிக்கொள்ள முனைவோமாக!


பிற்குறிப்பு:

அனைத்து மனிதர்களது உணர்வுகளும் மதிக்கப்படவேண்டியதே.இருப்பினும் இறைவனின் கட்டளைகளை மீறும் திராணி மனிதனுக்கு வந்துவிடும்போதும் அவனது கட்டளைகளை மதிக்கத் தவறும்பட்சத்திலும் எமக்குரிய கண்ணியம் சமூகத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இறைவன் தீர்மானித்துவிடுவான்.    

_

Binth Fauzar(SEUSL)©

Rate this content
Log in

More tamil story from Binth Fauzar

Similar tamil story from Classics