வெற்றுத்தாளாக என் மனது
வெற்றுத்தாளாக என் மனது


வெற்றுத்தாளாக என் மனது இருந்த போது நான் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. என் சிந்தைனைகளில் எந்தவிதமான தடுமாற்றமும் இல்லை.
ஆனால் என்று நான் அநியாயமாக வஞ்சிக்கப்பட்டேன் என்று உணர்ந்தேனோ அன்று எனக்குள் வந்த மாற்றம் ஏனோ என் குடும்ப வாழ்வினில் தேவையில்லாத சிக்கலை உண்டாக்கியது. தேவையற்ற விரிசலினை மனதிற்குள் கொண்டு வந்தது. என்னை ஏமாளியாக்கிப்பார்த்தவர்களை நான் மன்னித்தாலும் ஏனோ அவற்றை என்னால் மறக்க இயலவில்லை. என்னுடைய நாட்களை வெற்று நாட்களாக மாற்றிய அந்தக்காலத்தின் சுவடுகள் இன்றும் மாறாத இரணமாக என்னுள் இருக்கிறது. என்னுடைய எழுத்தாற்றலை மழுங்கச் செய்த அந்த வலி என்னுடைய முகப்பொலிவினை மங்கச் செய்தது. என்னுடைய கற்பனை வளம் குன்றியது. இளமை ததும்பிய என் கவிதைகளில் இப்போது இனிமை இல்லை.
என்னுடைய இயலாமையினை உணர்த்தி என்னை நானாக உணரச்செய்த அந்த நிமிடங்கள் - என்னுடைய நாட்களை புதுப்பொலிவுடன் மாற்றிய அந்த நண்பன் - இதே நகரினில் எங்கோ ஒரு இடத்தில் இருந்தாலும் - என் வாழ்வினில் ஒரு மாறுதலைக் கொண்டு வந்து என்னை உணரச்செய்த விந்தையினை என்றும் நான் மறக்கமாட்டேன்.
பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன் றுமுதல்
நீயா ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடு வாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.