Nivitha Jeni

Romance Crime Thriller

4.3  

Nivitha Jeni

Romance Crime Thriller

டெத் டே - 02

டெத் டே - 02

6 mins
1.2K


பெங்களூர்…

2020 Miss.Banglore is Miss. Megha Aanand…

என்ற அறிவிப்பு வழங்கப்பட புன்னகை முகத்தில் நிறைந்திருக்க, அளவற்ற மகிழ்ச்சியுடன் சென்று அந்த பட்டத்தை வாங்கிக் கொண்டாள் மேகா. அங்கிருந்த அனைத்து காமராக்களின் லென்சுகளும் அவளைத்தான் படம் பிடித்துக் கோண்டிருந்தன. ஏனெனில் அடுத்த நாள் தலைப்பு செய்தியே அவள் தானே…

சிகப்பு கலந்த மாநிறத்தில் இருந்த அவள் தோலும், மெலிந்த இடையும், கனிந்த முகமும் அவளின் உடலுக்கு அழகு சேர்க்க, அவளின் ரெத்தம் போல் சிவந்த உதடுகளும், சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழும் அதிசயமும் அவளது மதி முகத்தில் பிரதான இடம் வகித்தன. இப்படி அவளது அழகைக் கூறிக் கொண்டே போகலாம்.


அந்த நிகழ்வுக்கு அவள் அணிந்திருந்த ஆடையும் கூட அவளை ஒரு உலக அழகியாகவே பிரதிபலிக்க மகிழ்ச்சியுடன் அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு தன் நண்பர்களின் கிண்டல் பேச்சுக்களையும் ரசித்து அதில் வெட்கித்தவள் தன் நண்பர்களிடம்,

“Guys, I’m going to make a party for all of you that won this title today, so everyone should come to my party, It’s my request…” (ஃப்ரண்ட்ஸ் நான் இன்னைக்கு இந்த பட்டத்த ஜெய்ச்சதனால உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய விருந்து வைக்கப் போறன். நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும். இது என்னோட சின்ன கோரிக்கை).


அதற்கு அவளது நண்பர்களும் ஆராவாரம் செய்து தமது சந்தோஷத்தை தெரிவித்தனர்.

அதன் பின் அவள் தன் நண்பர்களுக்காக ஒரு மது விருந்தொன்றை ஒரு உயர் ரக கிளப் ஒன்றில் ஏற்பாடு செய்திருக்க அங்கு மேலைத்தேய பிரம்மாண்ட இசைக்கு தலைமுடியை விரித்துப் போட்டுக் கொண்டு பேய் போல் ஆடிக் கொண்டிருந்த பெண்களை தன் வசம் இழுத்து நடனமாடிக் கொண்டிருந்தனர் ஆண்கள். அதே போலவே மேகாவும் அவளது நண்பர்களும் நன்றாக மது அருந்தி விட்டு ஆட்டம் போட்டனர். அதிகளவான போதைக்குள்ளாகியதால் மேகா அந்த கிளப்பில் தள்ளாடித் திரிய அங்கு மது அருந்த வந்திருந்த மும்பை நகரில் மிகவும் பிரபலமாக தேடப்பட்டு வரும் கைதியான சுமந்த் அவளை அடையாளம் கண்டு கொண்டான்.


போதையில் காமன் தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்து கொள்ள அவளை முதலில் பார்வையால் சுவைத்தான். அதிலும் அவள் அணிந்திருந்த உடலோடு ஒட்டி முழங்கால்களுக்கு மேலிருந்த அந்த ஸ்லீவ்லெஸ் ஆடை அவளது ஒவ்வொரு உடலங்கங்களையும் தெளிவாகக் காட்டியது. அவளை பார்வையால் வருடிய சுமந்த் மதுப் போத்தலுடன் அவளை நெருங்கி,

“தும் டீக் தோ ஹோ னா? க்யா மெய்ன் ஆப்கீ ஹெல்ப் கர் சக்தா ஹூன்? ( நீங்க நல்லாதானே இருக்கீங்க? நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா?) 

எனக் கேட்கவே அவளோ எதுவும் கூறாமல் போதையில் தள்ளாட இதுதான் சரியான நேரம் என அவளது கைகளை தன் தோளில் போட்டு அவளது இடையில் கைவைத்து தன்னுடன் அணைத்தபடி அவளை அழைத்துக் கொண்டு தன் காரின் அருகில் வந்தான் சுமந்த்… அவளைக் காரின் பின் பக்க சீட்டில் கிடத்தி விட்டு தன் செல்போனை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தான்.


“ஹான் ஜி… ஜகா மெய்ன் எக் சுந்தர் லட்கீ ஹை… ஹம்னே கபீ ஐசே லட்கீ கா அனுபவ் நஹி க்யா… மெய்ன் உசே அபீ ஹமாரே கர் பர் லே ஜா ரஹா ஹூன்… டீக் ஹை ஜீ…” ( ஆமா, இங்க வந்த இடத்துல செம்மயா ஒரு பொண்ணு மாட்டிருக்கா, இதுவரைக்கும் நாம யாருமே அனுபவிக்காத அழகு, நான் இவள நம்ம இடத்துக்கு அழச்சிட்டு வந்திட்றன். சரி…)


என்றவாறு அழைப்பைத் துண்டித்து விட்டு அவளை ஒரு முறை ஏற இறக்கப் பார்த்து விட்டு ஒரு நமட்டுச் சிரிப்புடன் வண்டியை எடுத்தான். பாதை அநாதையாக இருக்க அதில் வேகமாக வண்டியை செலுத்திய சுமந்த் செல்லும் வழியெங்கும் மேகாவை திரும்பிப் பார்த்து ஏளனமாக சிரித்துக் கொண்டு வந்தான். அதில் சாலையில் பார்வையை தவற விட்டு முன்னால் வந்த இன்னொரு காருடன் மோதிக் கொண்டான்.

“Oh… Shit…”


கோபத்தில் கத்தியது அந்த இடித்த கார்க்காரன் தான். சுமந்தின் வண்டி இடித்ததில் அவனுடைய கார் கண்ணாடியின் முன் பக்க மின்குமிழ் உடைந்திருந்தது. இருட்டில் அவனது உருவம் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. தன் கார் சேதமடைந்த கோபத்தில் அவன் சுமந்திடம் வந்து,

“பாஹர் ஆயி… மெய்ன் கஹா பஸ் பாஹர் ஆயி…” (வெளிய வா… நான் உன்ன வெளிய வர சொன்னன்) 

என அவனைத் திட்டி காரை விட்டு இறங்கச் செய்தவன் அவனுடன் காரை சேதமாக்கியதற்க்கு வாய்த்தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அப்போது தான் அவன் தற்செயலாக தன் பார்வையை காருக்குள் செலுத்த அங்கு சுயநினைவின்றி கிடந்த மேகா தென் பட்டாள்.


அந்த இருட்டில் அவளது உடையும், இவனது பார்வையையும் பார்த்தவன் லேசாக சந்தேகம் வர,

“ Who’s inside in the car?” (காருக்குள் இருப்பது யார்?)

என அவன் கேட்டதுமே சுமந்தின் முகத்தில் நிலவிய பதற்ற உணர்வை அவன் அந்த இருட்டிலும் கவனிக்க தவறவில்லை. ஆனாலும் தன்னை சமாளித்துக் கொண்ட சுமந்த்,

“She… She is my wife…” (அவ… அவ என்னுடைய மனைவி)

“Wife?” (மனைவியா?)

என அவன் சந்தேகத்தோடு கேட்க, மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் சுமந்த்துக்கு தலைக்கு மேல் கோபம் ஏறியது.


“முஜே பூச்சோ கி தும் கோன் ஹை? ஜாவோ நா…” (அதக் கேக்க நீ யாருடா? இங்கருந்து கெளம்பு)

என அவன் விரட்டவே இதில் ஏதோ இருக்கிறது என உணர்ந்த அவன் போகாமல் கோபத்துடன் அங்கேயே நின்றிருந்தான். அவன் அதே திமிர்ப் பார்வையுடன் அங்கேயே நிற்பதைப் பார்த்த சுமந்த் மேலும் கோபம் கொண்டவனாய், அவன் நெஞ்சின் மேல் கைவைத்து,

“மெய்ன் கஹா பஸ் ஜாவோ…”


என கோபத்தில் கத்தினான். எந்த ஒரு ஆணுக்கும் தன் தன்மானத்தை சீண்டும் போது கோபம் வருவது இயல்பே, அதுவும் யாரென்றெ தெரியாத ஒருவன் எனும் போது அவனுக்கு மட்டும் கோபம் வராமல் இருக்குமா என்ன? தன் நெஞ்சில் கைவைத்த சுமந்தின் கையை மடக்கி பிடித்தவன் அவன் முகத்தை குறி வைத்து தன் மடக்கிய கைகளால் ஒரு குத்து விட அவனுக்கு அந்த அடியிலேயே மூக்கிலிருந்து இரத்தம் வந்தது… அதைப் பார்த்தவன் கோபமடைந்து அவனைத் தாக்க வர அவன் கைகள் இரண்டையும் தன் கைகளால் தடுத்தவன் அவன் உயிர் நாடியை தன் முட்டியால் தாக்க அதிலேயே அவன் சுருண்டு கீழே விழுந்தான்.


கீழே கிடந்தவனை கோபமாய் ஒரு முறை வெறித்து விட்டு காரின் பின் பக்க கதவைத் திறந்து போதையில் மயங்கிக் கிடந்தவளை கன்னத்தில் தட்டி எழுப்பிப் பார்த்தான். அவள் எழாததால் தன் காருக்கு வந்து தண்ணீர் போத்தலொன்றை எடுத்து வந்து அவளது முகத்தில் தண்ணீரைத் தெளித்து எழுப்பினான். சிறிது சுயநினைவிற்கு வந்த மேகா கண்களைக் கசக்கிக் கொண்டு மெதுவாக எழுந்தாள். எழுந்ததும் அவள் சுற்றும், முற்றும் அச்சத்துடன் பார்த்த பார்வையே அவள் கடத்தப்பட்டிருக்கிறாள் என அவனுக்கு விளக்கியது.


“தும் கோன் ஹை?” (நீ யாரு?) 

எனக் கேட்க அவளோ சிறு தயக்கத்துடன்,

“ஹா? மே… மேரா நாம் ஹை மேகா ஆனந்த்…” (அ… என்னோட பேர் மேகா ஆனந்த்) என அவள் தன் பெயரைக் கூறியவள், ‘நான் எப்டி இங்க வந்தன்?’  என லேசாக முணு முணுத்தாள். அதைக் கேட்டு விட்ட அவன்,

“தமிழா?”

“ம்… ஆமா, நீங்களும் தமிழா?”

“ம்…”


என்றதும் அவளுக்கும் தன் மொழிக்காரன் எனும் ஒரு நிம்மதி. காரை விட்டு இறங்கி கீழே கிடந்த சுமந்தைப் பார்த்ததும் தான் அவளுக்கு நடந்தவை சற்று நினைவுக்கு வந்தது.

“என்னாச்சு? இந்த ராத்திரில நீங்க எப்டி இவனோட காருக்குள்ள வந்தீங்க?”

இவ்வாறு அவன் கேட்டதும், அவளுக்கோ தான் போதையிலிருந்ததைக் கூற சற்று தயக்கமாகவே இருந்தது. இருப்பினும்,

“அது… அதுவந்து… நான் கொஞ்சம் ட்ரிங் பண்ணிருந்தன். அதுலதான்…”

என்றவள் அவனைப் பார்த்தாள். அவனது பார்வை அவளை அவ்வளவாக பாதிக்காவிடினும் அவளுக்கு சற்றே தயக்கமாகத் தான் இருந்தது. அவனும் சற்று யோசித்து விட்டு,

“சரி, கார்ல ஏறுங்க… நானே நீங்க இறங்க வேண்டிய இடத்துல கோண்டு போய் விட்றன்.”

“இல்ல வேணாம். நான் போன் பண்ணி என்னோட ஃப்ரண்ட்ஸ் அ வர சொல்லிக்குறன்…”

என்றதும் தான் அவளுக்கு தன்னுடைய செல்போனை அந்த கிளப்பிலேயே விட்டு விட்டு வந்தது ஞாபகம் வர தன் தலையில் அடித்துக் கொண்டவள் அவனைப் பார்க்க,

“இதுக்கு தான் சொன்னன், வாங்க வந்து வண்டில ஏறுங்க…”

என்றதும் அவளுக்குள் ஒரு நிம்மதியுடன் கூடிய பெருமூச்சொன்று பிறந்தது. அப்போது…

“சித்து…”

என்ற ஒரு சிறுபிள்ளையின் குரல். அந்த மழலைக் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள் மேகா அங்கு ஒரு அழகான நான்கே வயது நிரம்பிய ஒரு குட்டிப் பாப்பா கார் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர முயற்சிக்க அவன் உடனே ஓடி வந்து அந்தக் குழந்தையை தூக்கினான்.

“என்னாச்சு செல்லக் குட்டி? ஏந்திரிச்சிட்டீங்களா?”

எனக் கேட்க கண்களைக் கசக்கிய அந்த சிறுமி, “ம்… நாம பீட்டுக்கு போல?” என மழலை மறையாத குரலில் கேட்க அவனும்,

“அங்க தான்ம்மா போயிட்டிருந்தோம். இந்த aunty வந்த வழிய மறந்துட்டாங்களா? அதான் இவங்கள இறக்கி விட்டுட்டு நாம வீட்டுக்கு போலாம். நீங்க இங்க உக்காந்துக்கோங்க…”

“ம்…”


என அவள் கண்ணைக் கசக்க அவனும் காரின் பின்பக்க கதவைத் திறந்து அவளை உட்காரச் வைத்து விட்டு மேகாவை அமரச் சொன்னான். அவள் அமர்ந்த பின் அவனும் வண்டியை எடுக்க மேகாவும் பின்னால் திரும்பி,

“ஹே, குட்டி… உங்க பேர் என்ன?”

என்றதும் அந்த சிறுமி தூக்க கலக்கத்தில் சிரித்தபடி, “ரீத்து…” என்க மேகா,

“ஸ்வீட் நேம்…”

எனக் கூறி அவளது கன்னத்தைக் கிள்ளி விட்டு அவனிடம் திரும்பி,

“உங்க கொழந்தையா?”

“ம்…”

என அவன் தலையசைப்புடன் பதில் கொடுக்க மேகா,

“ரொம்ப க்யூட் ஆ இருக்கா…”

என்க அவனும் புன்னைகத்தபடி, “தாங்க்ஸ்” என்றான். மேகா மேலும் விடாமல்,

“தென்உங்க நேம்?”

“சித்தார்த்…” என அவன் தன் பெயரை அவளிடம் கூற அதில் முறுவலித்தவள்,

“தாங்க்ஸ் சித்தார்த்… என்ன அவன்கிட்டருந்து காப்பாத்துனதுக்கு…”

“இட்ஸ் ஓகே” என அவன் கூற அவர்களது பேச்சு அதற்கு மேல் நீடிக்கவில்லை. அவளும் அவனிடம் வழி கூறுவதற்காக மட்டும் பேசியவள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

“ஹா… ஸ்டாப், ஸ்டாப்… இங்க தான்.”

என்றதும் அவன் அந்தப் பெரிய வீட்டைப் பார்த்து விட்டு,

“நீ… மினிஸ்டர் சுந்தர் ஆனந்தோட பொண்ணா?”

“ம்… ஆமா… ஏன் கேட்டீங்க?”

“இல்ல உன்ன இப்டி செக்யூரிட்டி இல்லாம அனுப்பிருக்காரே… அதான் கேட்டன்.”

என்றதும் அதற்கு புன்னகையை பதிலாய் கொடுத்தவள்,

“எப்ப பாத்தாலும் செக்யூரிட்டி என் கூட இருக்கறது எனக்கு புடிக்காது அதான்.


எனிவேய்ஸ் வன்ஸ் எகய்ன் தாங்க்ஸ் சித்தார்த். பாய்…”

என்றவள் பின்னால் திரும்பி குழந்தையிடம்,

“பாய் ரீத்து குட்டி…”

எனக் கூறி அவர்களிடமிருந்து விடை பெற்றாள். கூறி விட்டு வீட்டுக்குள் நுழைந்தவள் தனக்கு வணக்கம் வைத்த செக்கியூரிட்டியையும் கவனிக்காமல் வேலைக்காரி வந்து இரவு உணவு உண்ணச் சொல்ல அதையும் பொருட்படுத்தாது நேராக தன் அறைக்குச் சென்றவள் குளித்து விட்டு வந்து தொப்பென்று கட்டிலில் விழுந்தாள். அவளுக்கு தெரியும் தான் எவ்வளவு தாமதமாக வந்தாலும் தன்னை ஏன் என்று கேட்க ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்று. தந்தையும், தமையனும் தான் வேலை வேலை என்றிருக்கிறார்களே, தன்னை கவனிக்க அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது இந்த எண்ணம் எழும் போது தன் அம்மா உயிருடன் இருந்திருக்கலாமோ என்று அவளுக்கு தோன்றும்.


3 வருடங்களுக்கு முன்னால் இறந்து போன தன் அம்மாவை சற்று நேரம் யோசித்தவளுக்கோ கண்களில் லேசாக கண்ணீர் துளிர்க்க, அதைத் துடைத்துக் கொண்டு அன்று சந்தித்தவனைப் பற்றி சிந்திக்கலானாள்.

“நான் ஏன் அவன் கேட்டதும் என் பேர சொன்னன்? அவன் தான் என்னக் காப்பாத்திருப்பான்னு நான் எப்டி அவன நம்புனன். அவன் கூட கார்ல வீடு வரைக்கும் சேஃப் ஆ?”

என யோசித்தவள் அதற்கு மேல் யோசிக்க முடியாமல் தலை வலிக்க படுத்து தூங்கி விட்டாள்.

To be continued…


Rate this content
Log in

Similar tamil story from Romance