Nivitha Jeni

Romance Crime Thriller

3.4  

Nivitha Jeni

Romance Crime Thriller

டெத் டே - 01

டெத் டே - 01

4 mins
1.1K


அளவுக்கதிகமாக கண்களில் நிறைந்திருந்த பதற்றத்தால் அந்த பெண்ணின் கைகள் லேசான நடுக்கத்திலேயே இருந்தது. பெங்களூரு ரயில் நிலையத்தை விட்டு அப்பெண் வெளியே வந்ததும் ஒரு சிறிய குளிர்பான கடைக்குள் சென்று அமர்ந்தாள். வானிலை மப்பும் மந்தாரமுமாக இருந்ததோடு சில்லென்று குளிர் காற்றும் வீசியது. அந்த பெண் எவ்வளவோ முயற்சித்தும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. அங்கிருந்த குளிர்பான கடைக்குள் சென்று அமர்ந்தவள் அங்கு வேலை செய்யும் ஒரு பையனிடம்,


பெண்: ஒரு Cool Drink குடுங்க...

என்று கேட்டு இரண்டே நிமிடத்த்தில் Cool Drink அவள் முன்னாலிருந்த மேசையின் மீது இருந்தது. அதை எடுத்துக் குடிக்கப் போனவளை அவளது செல்போனின் அழைப்புமணி தடுத்து நிறுத்த அதை மேசையிலேயே வைத்து விட்டு செல்போனை எடுத்து காதில் வைத்தாள்.


பெண்: ஹலோ... ஹலோ... யார் பேசறீங்க? ஹலோ...

என அவள் பல முறை அழைத்தும் அந்தப் பக்கமிருந்து பதில் வரவில்லை.

பெண்: ஹலோ, அதான் யார் பேசறீங்கன்னு கேக்குறன்ல?

என்றதும் அவளது கேள்விக்கு பதிலாய், மறுபுறமிருந்து ஒரு ஆணின் குரல் ஏளனமும் திமிரும் இணைந்து ஒலித்தது.


அவன்: என்ன அனு... cool drink குடிக்கிறியா? குடி... குடி... இவ்ளோ தூரம் உன்ன follow பண்ணி வந்த என்னால அதுல விஷத்த கலக்க எவ்ளோ நேரம் ஆகும்?

எனக் கேட்கவே அவனது இந்தக் குரலையும் பேச்சையும் கேட்ட அவன் 'அனு' என்று அழைத்த அந்த அனுராவுக்கு லேசான நடுக்கத்துடன் பதற்றம் தொற்றிக் கொண்டது. ஏனெனில் இதற்காக தானே அவள் பயந்தாள். கடந்த சில நாட்களாக அவளுக்கு இந்த மாதிரியான செல்பேசி அழைப்புக்கள் வந்ததே இதற்கு காரணமாய் இருந்தது. குரலில் நடுக்கத்துடன்,


அனுரா: என்ன ஏன் இப்டி torture பண்ற? நான் உனக்கு என்ன பண்ணன்? நீ யாரு?

எனக் கேட்டு கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்து விட்டாள் அனுரா. ஆனால் அவனோ அவளது கெஞ்சல்களை சிறிதும் சட்டை செய்யாமல்,


அவன்: ஹே... wait, wait, wait, ஏன் அவசரப் பட்ற? நாளைக்கே நான் யாருன்னு நீ தெரிஞ்சிக்க போற...

அனுரா: நாளைக்கா? ஏன்?

என கேள்விகளை இரண்டாய் அடுக்க அவனிடமிருந்து சற்று தொய்வான குரலில் பதில் வந்தது.


அவன்: என்ன அனு... நாளைக்கு என்ன நாள்னு நீ மரந்துட்டியா?

அனுரா: நா... நாளைக்கு என்னோட birthday...


அவன்: ம்... அதுதான். But அதுல ஒரு சின்ன correction. That's not your Birthday, It's your Death day...

அவனது ஏளனச் சிரிப்புடன் அந்த அழைப்பு துண்டிக்கப்பட அனுராவின் உடல் முழுதும் பயம் சுரு சுருவென வியாபித்துக் கொண்டது. அவன் இறுதியாய் கூறிய வசனங்கள், அவளை பயத்தின் உச்ச கட்டத்தில் ஊசலாட வைத்திருந்தது.


அனுரா: ஹலோ... ஹலோ... ச்ச...

என அவனை அழைக்க முயன்று சலித்தவள். ஒரு வெறுப்புடன் செல்பேசியை தூக்கி தன் கைப்பையினுள் போட்டாள். பின்பு தான் வாங்கி வைத்திருந்த கூல்ட்ரிங்கை குடிக்கப் போக,

"இதுல விஷத்த கலக்க எனக்கு எவ்ளோ நேரமாகும்"

அந்த அறியாத அவனின் குரல் தீனமாய் அவள் மனதிற்குள் ஒலிக்க அதைக் குடிக்க மனதில்லாது அதற்கான பணத்தைக் கொடுத்து விட்டு சர சரவென அங்கிருந்து வெளியேறினாள்.


அங்கிருந்து ஒரு டாக்ஸியைப் பிடித்து "ராஜீவ்" என பெரிதாக பெயரிடப்பட்ட அந்த தனியார் விருந்தினர் விடுதிக்குள் நுழைந்தாள். அந்த விடுதி பெங்களூரின் கோடீஸ்வரர்களில் ஒருவரான சாகர் அகர்வாலின் ஒரே மகன் ராஜீவுக்கு சொந்தமாயிருந்தது. டாக்ஸிக்கு பணத்தை கொடுத்து விட்டு உள்ளே நுழைந்தாள். அவள் உள்ளே சென்ற அடுத்த நிமிடம் அவளுக்கு ராஜீவிடமிருந்து அழைப்பு வந்தது.


செல்போனை ஒரு புன்னகையுடன் எடுத்த அனுரா,

அனுரா: ம்... சொல்லுடா...

"........"

அனுரா: ஆமா, நான் பத்திரமா வந்து சேந்துட்டன். அவன்கிட்டருந்து மறுபடியும் கால் வந்தா சொல்றன். நீ சீக்கிரம் வந்திடுவல்ல? ஏன்னா, எனக்கு இங்க இருக்க கொஞ்சம் பயமா இருக்கு...

"........"

அவன் அந்தப் பக்கமிருந்து சாதகமான பதிலை கூறியிருப்பான் போலும். அவள் முகத்தில் சிறு நிம்மதி தோன்ற அந்த சிறு நிம்மதியுடன் சென்று உடை மாற்றி விட்டு வந்து அமர்ந்தாள்.


காலையிலிருந்து அவளது செல்பேசி இயங்கிக் கொண்டிருந்ததால் அதை உயிர்ப்பிக்க சார்ஜ்ஜில் போட்டு விட்டு வந்தமர்ந்தவளுக்கு அவ் வீட்டின் அசாதாரண அமைதி சிறிது பயத்தை உண்டு பண்ணியதால் தன் மனதை வேறு புறம் செலுத்த வேண்டி தொலைக்காட்சியை ஆன் செய்தாள். ஆனாலும் அவள் மனமோ கலவரத்தில் உருண்டு கொண்டிருந்தது. அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தொலைக்காட்சியில்

திடீரென,

"விடமாட்டன்..."

எனும் வசனம் காஞ்சனா திரைப்படத்தில் இருந்து ஒளிபரப்பாக சற்றே பயந்து தான் போனாள்.


அவசரமாக தொலைக்காட்சியை நிறுத்தியவள் அமைதியாக அம்ர்ந்திருந்தாள். ஆனால் அங்கு அவள் நிச்சயம் தனிமையில் இல்லை என்பதை அடிக்கடி கேட்ட சப்தங்களிலிருந்து தெரிந்து கொண்டாள் அனுரா. அவளது பயத்தை மேலும் அதிகரிக்கவென்றே சிட்டுக்குருவி கீச்சிடும் சப்தம் கேட்க அதில் அதிர்ந்து போன அனுரா கதவுப் பக்கம் எட்டிப் பார்க்க யாரோ காலிங் பெல்லை அழுத்தியிருந்தார்கள்.


சத்தமில்லாமல் மெதுவாய் சென்று கதவின் துவாரம் வழியாக வெளியே பார்த்தாள். ஆனால் அங்கு யாருமே இருக்கவில்லை. 'யாராக இருக்கும்?' என்ற யோசனையுடன் கதவைத் திறந்தாள். அப்போதும் அங்கு யரும் இல்லை.


அனுரா: ஒரு வேள ராஜீவா இருக்குமோ? But அவன் morning தானே வர்ரன்னு சொன்னான்.

என சிறு குழப்பம் உருவாக தற்செயாலாய் கீழே பார்த்தாள். ஒரு பூங்கொத்து தரையில் வைக்கப்பட்டிருந்தது.

அனுரா: பொக்கேவா?

என அதை எடுத்துப் பார்க்க அதில் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதப்பட்டு அதனுடன் இணைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த வாசகத்தை வாய் விட்டே வாசித்தாள்.

'Rest in Peace'

With love your

Death...

என்றிருந்த வாசகத்தைப் பார்த்து அரண்டு போனவள் தன்னையும் மீறி அலறி கையிலிருந்த பூங்கொத்தை கீழே வீசியெறிந்து விட்டு நெஞ்சு பட படக்க கதவை பெரிய ஓசையுடன் சாத்தியவள் ஓடி வந்து சோஃபாவில் விழுந்து அழத் துவங்கினாள்.


பயம் முற்று முழுதாக அவளை ஆட்டிப் படைத்திருந்தது. செல்பேசி அழைக்க அதை எடுத்துப் பார்த்தாள். "ராஜீவ்" அழைப்பை அவசரமாக எடுத்தவள் பதறிய குரலில்,

அனுரா: ராஜீவ், ராஜீவ்... என... எனக்கு ரொம்ப பயமா இருக்குடா... நான் சாகப் போறேன்னோன்னு தோணுதுடா...


அவளது பதறிய குரலில் சற்று கலவரமடைந்த ராஜீவ், அனுராவை சமாதானம் செய்யும் நோக்கில்,

ராஜீவ்: OK, OK... Relax பயப்படாத, பயம் தான் நம்மளோட முதல் weakness... மொதல்ல பதட்டப்படாம என்ன நடந்திச்சின்னு சொல்லு...

என்று அவன் கேட்க அப்போது நடந்தது அனைத்தையும் ஒரே மூச்சில் கூறி முடித்தாள் அனுரா.


அதைக் கேட்டவன்,

ராஜீவ்: Relax அனு... மொதல்ல நீ fresh ஆகிட்டு வந்து படு. கண்ண மூடி தூங்கி எழுந்தா எல்லாம் சரியாப் போய்டும்.


என அவன் அவளுக்கு ஆறுதல் கூற அவளும் அவன் சொன்னதை ஆமோதித்து விட்டு, அழைப்பைத் துண்டித்தாள். ராஜீவுடன் பேசியது அவளுக்கு சற்று தைரியத்தைக் கொடுக்க அவன் கூறியது போல் குளித்து விட்டு வந்து படுத்தால் நன்றாக இருக்கும் என எண்ணியவள் அறைக்குச் சென்றாள். அறைக்குள் உடை மாற்றியவள், குளிக்கச் செல்லும் போது அணியும் உடையை உடுத்திக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.


அங்கு நுழைந்து Shower ஐ திறந்த அடுத்த நொடி அனுரா ஒரு பெரிய அலறலுடன் வெளியே வந்து விழுந்தாள். அவளது உடல் மீது பட்ட இரசாயன அமிலத்தினால் உடல் பாதி கருகி மீதி உருகிக் கொண்டிருந்தது. அவள் குளிக்கச் சென்ற போது அந்த குளியலறைத் தாங்கியில் தண்ணீருடன் கலந்திருந்த Acid ஏ இதற்கு காரணம். அவளது உடல் பாதி கருகி சிதைந்து கொண்டிருந்த நேரம் அவளிடம் மீதமிருந்த உயிரும் ஊசலாட மூச்சு பலமாக வெளியேறியது.


அவளது உயிர் சிறிது சிறிதாக போய்க் கொண்டிருக்க அப்போது சரியாக அங்கிருந்த மணிக்கூடு பன்னிரெண்டு மணிக்கான அறிவிப்பைக் கொடுக்க மங்கிய கண்களுக்கிடையில் யாரோ கதவைத் திறந்து பெரிய பூட்ஸ் கால்களுடன் உள்ளே வருவது தெரிந்தது... அது ஒரு ஆணின் கால்கள் எனத் தெளிவாகத் தெரிய அந்த ஆண் பாடிக் கொண்டே வந்தான்.


Happy Death Day to You...

Happy Death Day to You...

Happy Death Day Dear Anura

Happy Death Day to You...

அந்தக் குரலில் அனைத்து விதமான உணர்வுகளும் கலந்து ஒலிக்க அதைக் கேட்டுக் கொண்டே அனுராவின் மீதி உயிரும் பிரிந்தது...

To be continued... 


Rate this content
Log in

Similar tamil story from Romance